by admin on | 2026-08-10 05:50 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 675 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,05,900/- மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் செயற்கைக் கை மற்றும் ரூ.2340/- மதிப்பிலான ஊன்றுகோலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .ப.ராஜகுமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கமலராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வைத்தியநாதன்....!!!
திருமுருகன் காந்திக்கு இந்து எழுச்சி முன்னணி கண்டனம்.....!!!!!!
லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் - சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி - தொடரும் கைது !
சென்னையில் தலைமை சார்ந்த ஊக்கமளிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!!!