| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பெண் போலீசை சரமாரியாக குத்திக்கொன்ற கொடூரம் ! வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் கைது !!

by satheesh on | 2026-08-14 10:59 AM

Share:


பெண் போலீசை சரமாரியாக குத்திக்கொன்ற கொடூரம் ! வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் கைது !!

குடியாத்தம் அருகே பணி முடித்து வீட்டிற்குச் சென்ற தலைமை பெண் காவலர் கத்தியால் குத்திக் கொலை. கணவரை போலீசார் கைது செய்து விசாரணை:

வாணியம்பாடி, ஆக.13- வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (40). இவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் அர்வின் (45), ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று இரவு பணி முடித்து தாமரைச்செல்வி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரை அவரது கணவர் அர்வின் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அர்வின் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமரைச்செல்வியின் கை, கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது கணவர் அர்வினை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணி முடித்து வீட்டிற்கு சென்ற தலைமை பெண் காவலரை அவரது கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment