by satheesh on | 2026-08-13 08:16 AM
சட்டசபையில் கலக்கும் சௌம்யா அன்புமணி ! இவர் முதல்வரானால் எப்படி இருக்கும் - மீண்டும் மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள் !!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் , முதல்வர் , எதிர்க்கட்சி தலைவர்கள் என யார் என்ன பேசினாலும், அசால்ட்டாக மக்கள் மத்தியில் தன்னுடைய ஆக்கபூர்வமான பேச்சுக்கள் மூலம் ஸ்கொர் செய்துவிட்டு சென்று விடுகிறார் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌம்யா அன்புமணி, அந்த அளவுக்கு சௌம்யா அன்புமணியின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் 1 சதவிகிதம் கூட எதிர்ப்பு இல்லாமல், அணைத்து தரப்பு மக்களும் பார்த்து வியப்படையும் விதத்தில் அமைந்துள்ளது சௌம்யா அன்புமணியின் சட்டமன்ற பேச்சு. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பின்பு சட்டசபையை ஒரு பெண் சிங்கம் போல கர்ஜித்து, ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்து கொண்டிருக்கிறார் சௌம்யா அன்புமணி என்றால் அது மிகையாகாது என்று சொல்லும் வகையில் அணைத்து தரப்பு மக்களின்பாராட்டையும் பெற்று வருகிறார் சௌம்யா அன்புமணி. சட்டசபை கூடுகிறது என்றதும், ஆளும் கட்சியை எப்படி கதிகலங்க வைப்பது, எதிர்கட்சிகளுக்கு எப்படி கவுண்டர் கொடுத்து ஆப் செய்வது என , திமுகவும் - தவெக வும் ஹோம் ஒர்க் செய்துவிட்டு சட்டசபையில் மாற்றி மாற்றி சண்டையிட்டு கொண்டிருக்க, தனக்கு கிடைக்கும் நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டையும் நேரடியாக தாக்க வில்லை என்றாலும் மறைமுகமாக சாட்டையடி கொடுத்து கொண்டிருக்கிறார் சௌம்யா அன்புமணி. குறிப்பாக சமீபத்தில் மேதாதாது ஆணை குறித்து முதல்வர் அதற்கான நடவடிக்கைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என பேசியதை மறைமுகமாக, ஒன்று மேகதாது ஆணை கட்ட வேண்டும் அல்லது மேகதாது கட்ட கூடாது என இரண்டில் ஒரு முடிவு தான் எடுக்க வேண்டும், நமக்கு மேகதாது ஆணை கட்ட கூடாது, இப்படி இருக்கையில் எதற்காக முயற்சி செய்ய வேண்டும், நேரடியாக மேகதாது ஆணை நமக்கு தேவையில்லை அவ்வளவு தான் என சௌம்யா அன்புமணி கோபம் கலந்து பேசிய பேச்சு தான் இன்று தமிழகத்தில் ட்ரெண்ட். அந்த வகையில் 70 ஆண்டு பாரம்பரிய கட்சியான திமுகவும் சரி, 50 வருடன் பாரம்பரிய கட்சியான அதிமுகவும் சரி, புதியதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக வுக்கும் சரி சட்டசபையில் எப்படி பேச வேண்டும் , எதை பேச வேண்டும் என பாடம் எடுக்கும் வகையில் அமைத்துள்ளது சௌம்யா அன்புமணியின் சட்டசபை உரை. குறிப்பாக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி - ஆளும் கட்சி என மாறி மாறி மேடை போட்டு திட்டி கொள்ளுங்கள். சட்டசபையில் தமிழக மக்களுக்கான பிரச்சனையை பேசுங்க என்று சொல்லாமல் தன்னுடைய நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார் சௌம்யா அன்புமணி. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு மிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் சௌம்யா அன்புமணி, ஆனால் பாஜக கூட்டணி சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சௌம்யா அன்புமணி வெற்றி பெற்று இருந்தால், இன்று மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைத்திருக்கும், அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக தமிழக நலன் குறித்து அவருடைய குரல் ஓங்கி டெல்லியில் ஒலித்திருக்கும் அவரை வெற்றி அடைய செய்ய தவறி விட்டோமே என தற்பொழுது தர்மபுரி தொகுதி மக்கள் தங்கள் வேதனையை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.;சௌம்யா அன்புமணியின் இந்த செயல்பாடுகள் தொடரும் போது வரும் 2031 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்ப்பாளராக நிறுத்தினால் மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை தமிழக மக்கள் தற்பொழுது சௌம்யா அன்புமணிக்கு கொடுத்து வரும் ஆதரவு வெளிப்படுத்துகிறது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சட்டசபையை கலக்கும் சௌமியா அன்புமணி - இவர் முதல்வரானால் ? மீண்டும் மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள் !
தேனி கலெக்டரின் எளிமை பொது மக்களிடம் பெரும் வரவேற்பு...!!!
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.....!!!!
மக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வைத்தியநாதன்....!!!
திருமுருகன் காந்திக்கு இந்து எழுச்சி முன்னணி கண்டனம்.....!!!!!!