by admin on | 2026-08-12 07:28 PM
போடிநாயக்கனூர் வட்டம், அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று 89 பயனாளிகளுக்கு ரூ.48.01 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்!!!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், அகமலை கிராமத்தில் இன்று (12.08.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,
மக்கள் மாவட்ட நிர்வாகத்தைத் தேடி வந்த நிலை மாறி, மாவட்ட நிர்வாகமே மக்களைத்தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள்தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றது. அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு போடிநாயக்கனூர் வட்டம், அகமலை கிராமத்தைத் தேர்வு செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்து 48 மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையிலும், மேலும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் நடவடிக்கை மீதும் என தற்பொழுது 89 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இன்று 33 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு கிடைக்கச் செய்வது. அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையச் செய்வது என்பதேயாகும்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போடிநாயக்கனூரிலிருந்து உலுக்குருட்டி வழியாக அண்ணாநகர் பகுதிக்கு ரூ.2.01 கோடி மதிப்பீட்டில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு தற்பொழுது சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், இப்பகுதியில் வசித்து வரும் மக்களின் குடியிருப்பு தேவையை கருத்தில் கொண்டு, வெற்றி வீடுகள்" திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான வீட்டுமனைப் பட்டா தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வனத்துறையினரின் உரிய அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு சாத்தியமான இடங்களில் பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். அதேபோன்று, அருகிலுள்ள நத்தம் நிலங்களில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அதிகளவிலான பெண்களை சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இணைத்து, அவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு சேமிப்பு பழக்கம், தொழில் திறன், தொழில் தொடங்குதல் மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்ற பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்கள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க நேரில் வர வேண்டிய அவசியமில்லை. மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் முகாம்கள் நடைபெறும் பொழுது தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இதுபோன்ற முகாமில் கலந்துகொண்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப.அவர்கள் தொரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 1 பயனாளிக்கு ரூ.46,306/- மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், 11 பயனாளிகளுக்கு பட்டா நகலினையும், சாதிச்சான்றிதழ்களையும், 02 பயனாளிகளுக்கு இறப்புச் 03 பயனாளிகளுக்கு 1 சான்றிதழ்களையும், 1 பயனாளிக்கு பிறப்புச் சான்றிதழையும், பயனாளிக்கு பிறப்பிடச்சான்றிதழையும், வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகல்களையும், 07 பயனாளிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 04
பயனாளிகளுக்கு ரூ.1,30,000/- இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பிலான மரக்கன்றுகளையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.40,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், 2 பயனாளிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.5,50,000/- மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளும், சமூகநலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு গ.24,286/- முதிர்வுத்தொகைக்கான காலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும் மற்றும் 27 பயனாளிகளுக்கு இணையவழி சான்றிதழ்களும் என மொத்தம் 89 பயனாளிகளுக்கு ரூ.48,01,592/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அகமலை ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் கட்டுமானப்பணிகளையும், ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டிடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், இணை இயக்குநர்கள் மரு.கலைச்செல்வி (மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) மரு.கிரிஜா (கால்நடை பராமரிப்புத்துறை), இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) திருமதி நர்மதா, துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி கவிதா, வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) திரு.சையது முகைதீன் இப்ராஹிம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.கதிர்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுரேஷ், உதவி இயக்குநர் (நில அளவை) திரு.அப்பாஸ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.நேதாஜி. வட்டாட்சியர் (போடிநாயக்கனூர்) திரு.சுருளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி கலெக்டரின் எளிமை பொது மக்களிடம் பெரும் வரவேற்பு...!!!
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.....!!!!
மக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வைத்தியநாதன்....!!!
திருமுருகன் காந்திக்கு இந்து எழுச்சி முன்னணி கண்டனம்.....!!!!!!
லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் - சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?