| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!

by admin on | 2026-08-15 01:40 PM

Share:


சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!

சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன், பின்னர், சமாதானத்தை விளக்கும் வகையில், வெண்புறாக்களை பறக்கவிட்டார். அதனைத்தொடர்ந்து, காவல்துறை, ஊர்க்காவல்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


இவ்விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 1,25,845/- மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வாகனம் மற்றும் மூன்று சக்கர சைக்கிளையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 1,25,000/-மதிப்பீட்டிலான தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூபாய் 14,560/- மதிப்பீட்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (மக்காச்சோளம் செயல் விளக்க திடல்),


தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வேளாண் காடுகள் (மரக்கன்றுகள்) 100 சதவீத மானியம் மற்றும் தன்னிறைவு பயறு இயக்க திட்டம் (உளுந்து விதை) 50 சதவீத மானியங்களையும் என ஆக மொத்தம் 08 பயனாளிகளுக்கு ரூபாய் 2,65,405/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும், 52 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 74 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள், கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வ) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு. ஆயுஷ் வெங்கட் வட்ஸ், இ.ஆ.ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி ஏ.குழந்தை ராணி நாச்சியார் (சிவகங்கை) அவர்கள், திரு.டி.இளங்கோவன் (மானாமதுரை) அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயகுமார் அவர்கள், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஜெஃபி கிரேசியா அவர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் உட்பட மாணாக்கர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


T. Muthukamatchi evidence Editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment