| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"

by admin on | 2026-08-15 02:19 PM

Share:


தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"

80-ஆவது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-ஆவது சுதந்திர தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநான், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிபோர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசுப்பொருட்களை வழங்கி, பயனாளிகளுக்கு அரசுநலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கே.எஸ்.பிரவீன் கௌதம் இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 16 நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கேடயங்களையும், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை, நீதித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 269 அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17,562/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,00,000/- மதிப்பீட்டில் மீன் விற்பனை அங்காடி அமைப்பதற்கான ஆணையினையும், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.31,750/- கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1.30.000/- இயற்கை மரண உதவித்தொகைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.24,00,000/- வங்கி கடனுதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 110 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,62,00,000/- வங்கி கடனுதவிகளும், இயற்கை மரண உதவித்தொகைகளையும்,


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பிலான அட்மா திட்டம் கைமுறை விதை விதைப்பான் மற்றும் அட்மா திட்டம் மின்கல விசை தெளிப்பானையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பிரதம மந்திரியின் ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் நிரந்தர காய்கறி கல்தூண் பந்தல் அமைப்பதற்கான ஆணையினையும், வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.3,200/- மதிப்பீட்டில் மரக்கன்றுகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15,000/- மதிப்பிலான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.2,30,18,892/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர், அரசு மேல்நிலைப்பள்ளி, பூதிப்புரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம், பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி ஆண்டிபட்டி, தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சமூகநீதி விடுதி மாணவிகள் மற்றும் ஸ்ரீலெட்சுமி நாட்டியாலயா பயிற்சிப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, மை பாரத் கேந்திரா போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வெள்ளைப்பாண்டி தேவராட்டம் கலைக்குழுவினரின் தேவராட்டம் என 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சபரிஜங்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) திரு.துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, இ.வ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மகேஷ், திரு.கலைக்கதிரவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இராமகிருஷ்ணன், இணை இயக்குநர்கள் திருமதி பாலசரஸ்வதி (வேளாண்மை), திருமதி கிரிஜா (கால்நடை பராமரிப்புத்துறை) மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


T.. Muthukamatchi evidence Editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment