by admin on | 2026-08-15 01:04 PM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்-ன், திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினையொட்டி பொது மேலாளர் திரு. ஆ-முத்துகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போக்குவரத்துக் கழகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்- ன் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொது மேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்கள் இன்று (15.08.2026) தேசியக்கொடியினை ஏற்றிவைத்து. மரியாதை செலுத்தி சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கிளைகள் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி பேருந்து இயக்கத்தின்போது டீசலை சிக்கனமாக பயன்படுத்திய ஓட்டுநர்களுக்கு கிளை வாரியாக தலா ஒரு ஓட்டுநர் வீதம் 14 ஓட்டுநர்களுக்கும், கிளை வாரியாக வருவாய் அதிகம் ஈட்டிய தலா ஒரு நடத்துநர் வீதம் 14 நடத்துநர்களுக்கும், சிறந்த டயர் பராமரிப்பாக 1 பணியாளருக்கும். பயணி தவறி விட்டுச் சென்ற பொருளை ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.