by admin on | 2026-08-19 02:45 PM
தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் ரோல் பால் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
தமிழ்நாடு சப்-ஜூனியர் ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு சப்-ஜூனியர் ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும், சிறந்த விளையாட்டுத் திறனுடனும் பங்கேற்று, பல்வேறு சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மாணவர்களின் இந்த வெற்றியைப் பாராட்டும் வகையில் பள்ளி முதல்வர் சஹானா ராஜ்குமார், துணை முதல்வர் அரங்கநாயகி மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் இந்திரா ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகக் கரகோஷம் எழுப்பி வரவேற்று, அவர்களின் சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சக மாணவர்களின் இந்த உற்சாக வரவேற்பு, விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் இணைந்து விளையாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்கு வேலம்மாள் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெளிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விளையாட்டு பயிற்சியாளர் மணிகண்டன், மாணவர்களை தொடர்ந்து சிறப்பான முறையில் பயிற்றுவித்து, போட்டிக்கு தேவையான திறன்களை வளர்த்து, முழுமையாக தயார்படுத்தினார். அவரது சிறப்பான பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களின் விடாமுயற்சி, பள்ளி நிர்வாகத்தின் தொடர் ஊக்கம் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர் மணிகண்டனின் அர்ப்பணிப்பான பயிற்சி ஆகியவை இணைந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளT.
Muthukamatchi evidence Editor 9842337244
போடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்....!!!"
ரோல் பால் போட்டியில் தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம்....!!!
சப் ஜூனியர் ரோல் பால்ஸ்கேட்டிங் மாணவிகள் அசத்தல்....!!!!
மதுரையில் காந்தி அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி....!!!!
மாநிலம் முழுவதும் 13 மாவட்ட செயலாளர் களை மாற்றுவதற்கான ஆலோசனையில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...!!