| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

போடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்....!!!"

by admin on | 2026-08-19 05:18 PM

Share:


போடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்....!!!"

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சி, வலசதுறை கிராமத்தில் இன்று (19.08.2026) ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, வலசதுறை கிராமத்திலிருந்து அத்தியூத்து ஊராட்சி வரை தார்ச்சாலை அமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்ததையொட்டி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் முதற்கட்டமாக விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் முதலில் சாலைகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாலை அமைக்க உரிய இடங்களை வரைவு செய்து அதற்கானப் பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர், வலசதுறை மலைவாழ் மக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது அப்பகுதி மக்கள் இந்த மலைப்பகுதியை சுற்றி சுமார் 150 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். தினசரி நகர்பகுதிக்கு சென்றுவருவதற்கு போதிய சாலைவசதி இல்லாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்கள். அப்பொழுது அப்பகுதி மக்களிடம் தங்கள் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன். இ.ஆப, அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வட்டாட்சியர் (போடிநாயக்கனூர்) திரு.சுருளி போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மக்கத்தம்மாள். திருமதி சோனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


T. Muthukamatchi evidence Editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment