| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

சப் ஜூனியர் ரோல் பால்ஸ்கேட்டிங் மாணவிகள் அசத்தல்....!!!!

by admin on | 2026-08-17 11:47 AM

Share:


சப் ஜூனியர் ரோல் பால்ஸ்கேட்டிங் மாணவிகள் அசத்தல்....!!!!

மாணவிகளின் அசத்தல் ஆட்டம்! திருச்சியில் களைகட்டிய சப்-ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி

மாணவிகளுக்கான சப்-ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று, தங்களது வேகம், திறமை மற்றும் விளையாட்டு நுணுக்கத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

திருச்சியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் சப்-ஜூனியர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் இன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.


அண்டர்-14 மாணவிகளுக்கான போட்டியில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் 15 போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாவட்ட அணியைச் சேர்ந்த மாணவிகளும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வெற்றிக்காக சிறப்பாக விளையாடினர்.

முதல் நாளில் மாணவர்களுக்கான போட்டிகளுக்கு இடையே மாணவிகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு, மொத்தம் 25 போட்டிகள் விறுவிறுப்பாக நிறைவு பெற்றன. இரண்டாம் நாளான நேற்று மீதமிருந்த 20 போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் மூலம் லீக் சுற்றில் மொத்தம் 45 போட்டிகளும் நிறைவு பெற்றன.

லீக் சுற்றில் வெற்றி பெற்று தகுதி பெற்ற அணிகள் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட உள்ளன.

இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சப்-ஜூனியர் மாணவிகளின் அசத்தலான ஆட்டத்தை காண பெற்றோர்களும் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


T. Muthukamatchi evidence Editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment