by admin on | 2026-07-15 03:57 PM
திருப்பி அடிக்க திமுக ரெடி.. விரட்டி அடிக்க விஜய் ரெடி...!
பட்ஜெட் கூட்டத்தொடரில் புயல் மையம் கொள்ளும்..!
-மா.பாண்டியராஜ்.
கரூரில் பேசிய முதல்வர் விஜய்.... ‘‘இனி சட்டசபையில் கதவை பூட்டிக் கொண்டு பேச வேண்டும் போல...’’ என்ற பேசியதை கேட்ட தி.மு.க., சிலிர்த்து எழுந்துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்யாமல், முதல்வரை எதிர்கொள்ள தி.மு.க., தயாராவதால், சட்டசபைக்குள் இம்முறை புயல் மையம் கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய்... ‘பேசுங்க சி.எம்.,’ அப்படீனு நெஞ்சுல குத்திட்டு வர்றாங்க...’ (அற்புதமான உடல் மாடுலேசன்)... ஆனா பேச ஆரம்பிச்ச உடனே.... .. ஓடுகின்றனர் என்று சூப்பர் மாடுலேசனுடன் பேசினார். அதே போல் ‘‘ஓடு... ஓடு... ஓடு... ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன்’’ என்று பாடிக்கொண்டே ஓடுவது போல் பாடி மாடுலேசன் காட்டினார். அடுத்து ‘‘சட்டசபையில்... இனி பேசும் போது, கதவுகளை பூட்டிக் கொண்டு பேச வேண்டும் போல...’’ என கிண்டலடித்தார்.
அடுத்து ஒருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிட்டார். நான் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சாரை சொல்லல... எனக்கு அவர் மேல் நல்ல அபிப்பிராயம் இருக்கு... நான் சொல்ல வந்தது வேற ஒருத்தரை.... என்று முன்னாள் முதல்வரை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தார். அதேபோல் இன்னும் உங்க ஆட்சி நடக்குதுனு நினைப்போ.... கண்ணை திறந்து பாருங்க... ஆட்சி மாறி ரொம்ப நாளாச்சு... என்று கலாய்த்ததும் தி.மு.க.,வை ரொம்பவே உசுப்பேற்றி உள்ளது.
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கள் தி.மு.க.,வை கொந்தளிக்க வைத்துள்ளது. நாங்களா பேச்சுக்கு பயந்து ஓடுபவர்கள். இனி சட்டசபையில் வெளிநடப்பு செய்யாமல் உள்ளே இருந்து கொண்டே பதிலடி தருகிறோம் என தி.மு.க., முடிவு செய்து பெரிய அளவில் ஹோம் ஒர்க் செய்து வருகிறது.
கதவை பூட்டினாலும், பூட்டாவிட்டாலும், நாங்கள் வெளியேறப்போவதில்லை. பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து விட்டனர். ஆக முதல்வர் விஜய் என்ன செய்தாலும், அங்கேயே இருந்து திருப்பி அடிக்க தி.மு.க., முழுமையாக தயாராகி விட்டது.
இன்னும் தோண்ட... தோண்ட... எத்தனை பேர் சிக்கப்போகிறார்களோ... என்று முதல்வர் சுட்டிக்காட்டியது... இனி அவர் விரட்டி... விரட்டி அடிக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாகி விட்டது. தி.மு.க.,வின் முடிவினை பற்றி... உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட முதல்வர் விஜய்... தி.மு.க.,விற்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு... விரைவுபடுத்தி உள்ளார்.
இப்படி இரு தரப்பும் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிச்சயம் புயல் அடிக்கும் என்பது மட்டும் உறுதியாகி விட்டது. கதவையும் பூட்ட வேண்டாம்... நேரடி ஒளிபரப்பையும் நிறுத்த வேண்டாம்.... வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்... என தி.மு.க., களம் இறங்கி இருப்பதும்.... இதனை எதிர்காள்ள முதல்வர் தரப்பு தயாராக இருப்பதும்... அடுத்து நேரடியாக ஒரு லைவ் ஆக்சன் சினிமா பார்ப்பதை போல் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நிச்சயம்... சட்டசபையில் ஜெயலலிதா... கருணாநிதி ஆகியோர் இருந்த போது... அதிமுகவினரும்... தி.மு.க.,வினரும் மோதிக்கொண்டதை விட... இந்த முறை உதயநிதி தலைமையிலான தி.மு.க.,வினரும்.... விஜய் தலைமையிலான தவெகவினரும் மோதுவது மிகவும் தீவிரமாகவும், உக்கிரமாகவும் இருக்கும்.... இது டி20 போட்டிகளை போல் சுவாரஸ்யமாக இருந்தால் பரவாயில்லை.... அதையும் தாண்டி... ஜெ... கருணாநிதி மோதியது கலவரமாக, அப்போது நடந்ததை போல கைகலப்பு நடக்காமல் இருந்தால் நல்லது என பொதுமக்கள் இப்போதே வேண்டுதல்களை வைக்க தொடங்கி விட்டனர்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் அமைதியாக நடக்க மட்டும் வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் அதிரடியாக அடிதடியில் முடிந்து விடக்கூடாது என்பது தான் இப்போதைக்கு தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம்... தி.மு.க.,வும் அதிமுகவும் இதற்கு முன்னர் பலமுறை பகிரங்கமாக மோதியதை நினைத்து தான் மக்கள் இந்த முறை சற்று அச்சத்தில் உள்ளனர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !