by satheesh on | 2026-05-26 10:42 AM
பொதுமக்கள் தங்கள் குறைகள் / கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் (94877 71077) சேவை தொடக்கம் :
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.05.2026), பொதுமக்கள் தங்கள் குறைகள் / கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 24X7 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும் புகார் தெரிவிக்கும் நபர்களுடைய பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் பாதுகாக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் சிறிய அளவிலான மற்றும் அன்றாட தேவைகள் தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும். அதிக நிதி தேவைப்படும் பணிகள் தொடர்பான புகார்களுக்கு திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதால், அவற்றை நிறைவேற்ற சிறிது காலம் எடுத்துக்கொள்ளப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும். தேனி மாவட்ட மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ்-அப் புகார் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செந்தில் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !