| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஜி பேயில் புது ஆப்ஷன் - பணம் போய்விடுமா ? தீயாய் பரவும் வதந்தி !

by satheesh on | 2026-04-08 07:42 PM

Share:


ஜி பேயில் புது ஆப்ஷன் -  பணம் போய்விடுமா ?  தீயாய் பரவும் வதந்தி !

 ஜி-பே பாக்கெட் மணி ஆப்ஷன் : ஓபன் செய்தால் பணம் போய்விடுமா? 

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கில், Google Pay செயலியில் “UPI Circle” அடிப்படையில் “Pocket Money” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திறந்தால் பணம் தானாக போய்விடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. “Pocket Money” அம்சம் மூலம் குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு இல்லாமலேயே கட்டுப்பாட்டுடன் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கலாம். இந்த வசதியின் கீழ், பெற்றோர் மாதாந்திர செலவு வரம்பை ₹15,000 வரை நிர்ணயிக்கவோ அல்லது ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தனித்தனியாக அங்கீகரிக்கவோ முடியும். அனைத்து பரிவர்த்தனைகளும் உடனடி அறிவிப்புகளுடன் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். தேவையான போது சேவையை உடனடியாக நிறுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். மேலும், இது NPCI இயக்கும் UPI அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன. அதே நேரத்தில், “UPI Circle – Pocket Money” அம்சம் மோசடி அல்ல; இது அதிகாரப்பூர்வமான, கட்டுப்பாட்டுடனான நிதி பயன்பாட்டு வசதி என விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், UPI பரிவர்த்தனைகளில் PIN/OTP பகிர்வு அல்லது தெரியாத கோரிக்கைகளை ஏற்கும் செயல்கள் மட்டுமே மோசடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment