| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

மதுரை வடக்கு - டஃப் கொடுக்கும் டாக்டர் சரவணன் - திணறும் திமுக.!

by satheesh on | 2026-04-08 06:24 PM

Share:


மதுரை வடக்கு - டஃப் கொடுக்கும் டாக்டர்  சரவணன்  - திணறும் திமுக.!

மதுரை வடக்கு - தளபதிக்கு டஃபு கொடுக்கும் டாக்டர் சரவணனின் வியூகம்..! தடுமாறும் திமுக..!

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் 2026 தேர்தல் களம், தமிழகத்தின் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. மதுரை என்றாலே அரசியல் உணர்ச்சிகளின் சங்கமம். அதிலும் 'மதுரை வடக்கு' தொகுதி, இம்முறை ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்குத் தயாராகி வருவதை தற்போதைய கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த 2021-ல் பாஜக சின்னத்தில் நின்றபோதே 50,000 வாக்குகளை அள்ளிய டாக்டர். சரவணன், இம்முறை அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் நேரடியாகக் களமிறங்குவது, அத்தொகுதியின் வெற்றி வாய்ப்புகளை அவர் பக்கம் திருப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் தற்போது சந்தித்து வரும் ஊழல் புகார்கள், ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மேயர் இந்திராணியின் கணவர் மீதான வரி ஏய்ப்புப் புகார்கள், மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்தது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. அரசு அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து மென்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்திச் செய்த 'போலி ஜிஎஸ்டி பில்' மோசடி, சொத்து வரி முறைகேடுகள், 2026 தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவின் மிக முக்கியமான ஆயுதமாக மாறியுள்ளது. "திமுக கவுன்சிலர்களின் ஆதிக்கம் தொகுதியில் அதிகம் உள்ளது" என்ற மக்களின் குமுறலை, டாக்டர் சரவணன் தனது பிரசாரத்தில் மிக லாவகமாகப் பயன்படுத்தி வருகிறார். வாக்கு வங்கியில் மாற்றம்,  மதுரை வடக்கைப் பொறுத்தவரை 'சாதி கணக்கு' என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் ஆணிவேர். பாரம்பரியமாக அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள், இம்முறை டாக்டர் சரவணனுக்குப் பெரும் பலமாக இருக்கும். தற்போதைய எம்.எல்.ஏ கோ. தளபதி, யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சிட்டிங் எம்.எல்.ஏ மீதான அதிருப்தி அந்த வாக்குகள் பிரிந்து செல்லவும் வாய்ப்புகள் அதிகம். வழக்கமாக திமுகவுக்குச் செல்லும் முஸ்லிம், கிறிஸ்தவ சமூக வாக்குகளில், இம்முறை தமிழக வெற்றிக் கழகம் ஒரு பெரும் பங்கைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்குச் சிதறல் மறைமுகமாக அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்குச் சாதகமாக அமையக்கூடும்.அடிப்படை வசதிகள் இல்லாததால் வணிகர்கள்  அதிருப்தி  : யானைக்கல், சிம்மக்கல் மற்றும் தல்லாகுளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் வணிகர்கள், ஜிஎஸ்டி மிரட்டல்கள் மற்றும் உள்ளூர் வரிவிதிப்பு முறைகேடுகளால் கடும் கோபத்தில் உள்ளனர். அதேபோல், பிபி குளம், நரிமேடு போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் பாதாளச் சாக்கடை, குடிநீர் தட்டுப்பாடு போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் திமுகவின் கோட்டையைச் சிதைக்கக்கூடும்.காங்கிரஸின் சலசலப்பு உள்ளதால்,  திமுக கூட்டணியில் இத்தொகுதியைக் கேட்டு காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது, திமுக தொண்டர்களிடையே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோ. தளபதிக்கே மீண்டும் வாய்ப்பு என்றாலும், கூட்டணிக் கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. சின்னம் மற்றும் சாதி கணக்கு சரியாக அமைந்தால் மட்டுமே மதுரையில் வெற்றி சாத்தியம். கடந்த முறை தாமரைச் சின்னத்தில் நின்றபோதே ஐம்பதாயிரம் வாக்குகளைத் தொட்ட டாக்டர் சரவணனுக்கு, இம்முறை 'இரட்டை இலை' சின்னமும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தியும் கைகொடுக்கும் பட்சத்தில், மதுரை வடக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment