| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தோட்டத்து வீட்டில்..! 13 பேர் அதிரடி கைது...! ரொக்கம் ₹6000 பறிமுதல்..!

by Vignesh Perumal on | 2026-04-02 10:15 AM

Share:


தோட்டத்து வீட்டில்..! 13 பேர் அதிரடி கைது...! ரொக்கம் ₹6000 பறிமுதல்..!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தோட்டத்து வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் இன்று வடமதுரை அடுத்த ஆண்டியப்பட்டி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு தென்னந்தோப்பு வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் கூடியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தத் தோட்டத்து வீட்டிற்குச் சென்ற போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அங்குப் பணம் வைத்துச் சட்டவிரோதமாகச் சூதாடிக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் பின்வரும் 13 பேரை போலீஸார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். சுப்பிரமணி (50), வெங்கடேசன் (34), முருகேசன் (53), அழகர் (67), குமாரவேல் (37), செல்வகுமார் (36), பெலிக்ஸ்பெனிஸ் (38), ராஜ் (50), சிவராஜ் (51), சேகர் (54), மணிகண்டன் (42), ஐயப்பன் (43) மற்றும் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ₹6,000 ரொக்கப் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட 13 பேர் மீதும் வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இது போன்ற சட்டவிரோதக் கூட்டங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமதுரை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் இல்லாத தோட்டத்து வீடுகளை இத்தகைய செயல்களுக்குப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment