மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
by satheesh on |
2026-03-09 02:55 PM
Share:
Link copied to clipboard!
மூக்கை மூடி செல்லவும் ! நாறும் பஸ் நிலையம் - உறங்கும் மாநகராட்சி :
மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 58 ஆவது வார்டு ஆரப்பாளையம் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பஸ்களும், சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக , மேற்கு நோக்கி செல்லும்
கொங்கு மண்டலம் மற்றும் கேரளா இங்கிருந்துதான் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள புற காவல் நிலையம் அருகே மூடிய நிலையில் கழிவறை ஒன்று இருக்கிறது. இதிலிருந்து மனித கழிவுகளுடன் கழிவு நீரானது வெளியே சாலையில் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும், பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்,
அருகே உள்ள ஹோட்டல்கள், டீ காபி வடை விற்பனை நிலையங்கள், பழச்சாறு மற்றும் கரும்பு ஜூஸ் விற்பனை நிலையங்கள், சாலையோர டிபன் சென்டர்கள் போன்றவற்றில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்த்துக் கொள்வதால் சுகாதாரக் ஏற்பட்டு தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் இவற்றின் விற்பனை பாதிக்கப்படுவதாக அதன் உரிமையாளர்களால் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. மேலும் ,
புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையை திறக்க விடாமல் ஆளுங்கட்சியை சேர்ந்த சேர்ந்தவர் ஒருவர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் சாலையோரம் சிறுநீர் கழிப்பதால் சுற்றுச்சூழல் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் மௌனம் காக்கிறது. சுற்றுலாத் சார்ந்த மதுரையில் இந்த பஸ் நிலையம் வெளிநாட்டு பயணிகளையும் முன் சுளிக்க வைக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? பயணிகளின் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யுமா ? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த பஸ் நிலையம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.