by satheesh on | 2026-03-09 12:04 PM
திமுக 162, உதயசூரியன் 176, கூட்டணி கட்சிகள் 58 சீட்- ஸ்டாலின் இறுதி செய்யும் தொகுதி பங்கீடு !
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்பதால் திமுக தலைமை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை காட்டிலும் 3 தொகுதிகள் அதிகமாக, அதாவது 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எஞ்சியுள்ள கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட்டது.
2021 தமிழகத் தேர்தல் முடிவுகள்சிறிய கட்சிகளுக்கு 15 இடங்களில் தங்கள் சின்னத்தை ஒதுக்கியதன் மூலம் மொத்தம் 188 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிட்டது. இதையடுத்து 125 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. உதயசூரியன் நின்ற 15 இடங்களில் 8ல் மட்டும் வென்றிருந்தனர். மொத்தமாக திமுகவின் வெற்றியை 133 எனக் குறிப்பிட்டனர். கூட்டணி கட்சிகள் 46 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இம்முறை கூட்டணி கணக்குகள் எப்படி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றனர். இம்முறை 8 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை பொறுத்தவரை தலா 6 இடங்களில் போட்டியிட்டு 2ல் வென்றிருந்தனர். இம்முறை 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வெற்றி வாய்ப்பிருக்கும் அதிகமிருக்கும் தொகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்க திமுக தயாராகி வருகிறது. இதன்மூலம் வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் என்று கணக்கு போடுகின்றனர். மதிமுகவை பொறுத்தவரை 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தனர். இம்முறை தனிச்சின்னம், அதாவது தீப்பெட்டி சின்னத்தில் நிற்க விரும்புகின்றனர். இந்நிலையில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பினால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்படும் என்று திமுக கறார் காட்டியுள்ளது. அதன்படி பார்த்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களை மட்டும் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இவர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இம்முறை 2 இடங்களை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடந்த தேர்தலில் 3ல் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இம்முறை 2 தொகுதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த தேர்தலில் 2ல் போட்டியிட்டு 100 சதவீத வெற்றியை உறுதி செய்தனர். இம்முறையும் அதே 2 தொகுதிகள் வழங்கப்படவுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றனர். இம்முறை வேல்முருகன் கேட்கும் 2 தொகுதிகளை ஒதுக்க அதிக வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதி தமிழர் பேரவைக்கு கடந்த முறையை போலவே இம்முறையும் ஒரே ஒரு தொகுதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 2021 தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். மக்கள் விடுதலை கட்சி கடந்த தேர்தலில் கிடைத்த ஒரு தொகுதியில் வெற்றி பெறாத சூழலில், இம்முறையும் அதே எண்ணிக்கையில் தான் ஒதுக்கீடு.
தமிமுன் அன்சாரி முதல் மக்கள் நீதி மய்யம் வரை - புதிய கட்சிகளுக்கு எத்தனை சீட்?
புதிய வரவான தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக பேரவை, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, புதிய திராவிட கழகம், எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு 14 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவுள்ளனர். தேமுதிக 6, மக்கள் நீதி மய்யம் 2 இடங்களை ஒதுக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
திமுக, உதயசூரியன், கூட்டணி கட்சிகளுக்கு சீட் கணக்கு :
இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தால் திமுக 162 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலை காட்டிலும் 8 தொகுதிகள் குறைவு. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 14 இடங்களை சேர்த்தால் 176 தொகுதிகள் வரும். தனிச்சின்னம், உதயசூரியன் சின்னம் ஆகிய கணக்குகளின் அடிப்படையில் எடுத்து பார்த்தால் கூட்டணி கட்சிகள் 58 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்பதால் திமுக தலைமை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை காட்டிலும் 3 தொகுதிகள் அதிகமாக, அதாவது 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எஞ்சியுள்ள கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட்டது.
2021 தமிழகத் தேர்தல் முடிவுகள் :
சிறிய கட்சிகளுக்கு 15 இடங்களில் தங்கள் சின்னத்தை ஒதுக்கியதன் மூலம் மொத்தம் 188 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிட்டது. இதையடுத்து 125 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. உதயசூரியன் நின்ற 15 இடங்களில் 8ல் மட்டும் வென்றிருந்தனர். மொத்தமாக திமுகவின் வெற்றியை 133 எனக் குறிப்பிட்டனர். கூட்டணி கட்சிகள் 46 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இம்முறை கூட்டணி கணக்குகள் எப்படி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!