by satheesh on | 2026-03-01 12:12 PM
ஈரானின் உச்சபட்ச தலைவர் - இந்த கமேனி யார்?
அமெரிக்கா வெறுப்பது ஏன்? எதனால்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
சுமார் 40 ஆண்டுகள் ஈரானை கட்டி ஆண்ட கமேனி என்பவர் யார்? அமெரிக்காவிற்கு அவர் கொடுத்த குடைச்சல் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ராணுவ தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார்.
கமேனி மரணத்தை உறுதி செய்த ஈரான்:
நீண்ட கால எச்சரிக்கைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை அன்று தெஹ்ரானில் கொல்லப்பட்டார். இதனை அந்நாட்டு அரசு ஊடகங்களே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. 5 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த 2024ம் ஆண்டு முதல்முறையாக பொதுமக்களிடையே தோன்றியபோது, இஸ்ரேல் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என கமேனி பேசியிருந்தார். ஆனால், அடுத்த 17 மாதங்களில் சொந்த மண்ணிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படி ஒரு மோசமான தாக்குதலை நடத்தி கொள்ளும் அளவிற்கு கமேனி செய்தது என்ன? 36 ஆண்டுகள் ஈரானை கட்டி ஆண்டது எப்படி? அமெரிக்காவிற்கு அவர் கொடுத்த குடைச்சல் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
யார் இந்த கமேனி?
வடகிழக்கு ஈரானில் உள்ள புனித ஷியா நகரமான மஷாத்தில் 1939 ஆம் ஆண்டு பிறந்த கமேனி, ஈராக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய தலைவரும் அஜர்பைஜானிய இனத்தவருமான ஒருவரின் மகனாவார். இளம் வயது முதலே இறையியல் படிப்பில் கவனம் செலுத்தினார். நஜாஃப் மற்றும் கோமில் உள்ள உயர்கல்விக்கான மிகவும் மதிப்புமிக்க ஷியா மையங்களில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பல முத்த அறிஞர்களிடம் இருந்து பாட அனுபவங்களை பெற்றார். அதன் விளைவாக கமேனி நீதித்துறை படிப்புகள் மற்றும் பொது இறையியல் விளக்க வகுப்புகளை நடத்தினார். இதன் மூலம் முடியாட்சியில் ஏமாற்றமடையத் தொடங்கிய அடுத்த தலைமுறை மாணவர்களை அணுக அவருக்கு வாய்ப்பளித்தது. 1953 ஆம் ஆண்டு MI6 மற்றும் CIA மூலம் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதனிடையே, அரசியல் ஆர்வலராக, கமேனி ரகசிய போலீசாரால்பலமுறை கைது செய்யப்பட்டார்
உச்சபட்ச தலைவரான கமேனி..
முடியாட்சி அகற்றப்பட்டவுடன், புதிய ஈரானை நிறுவுவதில் கமேனி ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார். 1980 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னர் ஈரான்-ஈராக் போர் வெடித்த பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மேற்பார்வையாளராகவும் சிறிது காலம் பணியாற்றினார். ஒரு சிறந்த பேச்சாளரான கமேனி, தெஹ்ரானின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைத் தலைவர் பதவியையும் பெற்றார். 1981 ஆம் ஆண்டு கமேனிக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. புதிதாக நிறுவப்பட்ட ஈரானிய இறையாட்சிக்கு எதிராக உருவெடுத்த ஆயுதக்குழு நடத்திய படுகொலை முயற்சியில், நூலிழையில் தப்பித்த கமேனி தனது வலது கையைப் பயன்படுத்தும் வசதியை இழந்தார். அதே ஆண்டில், கமேனி அதிபர் பதவியை வென்று ஈரானின் முதல் மதகுரு அதிபரானார் அப்போது ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த கொமேய்னி, கைதிகளை அதிகளவில் தூக்கிலிடப்பட்ட சர்ச்சையை அடுத்து, தனது வாரிசாக இருந்த அயதுல்லா ஹொசைன் அலியை ஒதுக்கி வைத்தார். இதையடுத்து அரசியலமைப்பைத் திருத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கவுன்சில், கமேனியை அடுத்த புதிய உச்சபட்ச தலைவராக நியமித்தது. இதற்காக பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. அதன்படி, 1989ம் ஆண்டு நாட்டின் உச்சபட்ச தலைவராக கமேனி பொறுப்பேற்றார். அதன் பிறகு 36 ஆண்டுகள் ஈரானின் அதிகார மையமாக உருவெடுத்தார்.
அமெரிக்கவுடனான மோதல்..
இரண்டு முறை ஈரான் அதிபரான சீர்திருத்தவாதி முகமது கட்டாமி ஆகியோர், மேற்கத்திய நாடுகளுடன் நல்ல உறவை மேம்படுத்த முற்பட்டார். ஆனால், மேற்கத்திய நாடுகள் மீதான கமேனியின் சந்தேகமும் அவநம்பிக்கையும் உறுதியாகவே இருந்தன. இஸ்லாமியக் குடியரசின் இருப்பு, இறையாண்மை மற்றும் மதிப்புகளை அடிப்படையிலேயே அவர்கள் எதிர்ப்பதாக நம்பினார். தங்களது பிராந்தியத்தில் தடைகள், கலாச்சார நாசவேலை மற்றும் தீய நடைமுறைகள் மூலம் தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா உள்ளிட்டவற்றை குறிப்பிட்டார். 1980களின் ஈரான்-ஈராக் போரின் போது சதாம் உசேனை ஆதரித்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது கமேனிக்கு நீடித்த வெறுப்பு ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவிற்கு எதிராக அவர் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அமெரிக்காவிற்கு கொடுத்த குடைச்சல் என்ன?
நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்திய அதேநேரத்தில், மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதையும் கமேனி உணர்ந்திருந்தார். அதன்படி, பல்வேறு மறைமுக நடவடிக்கைகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் போன்ற குழுக்களுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிராக, மறைமுகப் போர்களை நடத்த கமேனி நிதியுதவி அளித்து வழிநடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது அணு ஆயுத ஆராய்ச்சி : ஈரானின் அணுசக்தி திட்டத்தின் விரிவாக்கத்தை கமேனி வழிநடத்தினார். இதனை அமெரிக்கா தனக்கான அச்சுறுத்தலாகக் கருதியது. இதனை முடக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்க்கா எதிர்ப்பு : கமேனி அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அடிக்கடி விமர்சித்தார், மேலும் அமெரிக்காவிற்கு மரணம் என்ற முழக்கத்தையும் ஊக்குவித்தார். இது அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பு என்று பேசினார். இஸ்ரேல் மீதான விரோதம் :
அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற கமேனியின் வெளிப்படையான அழைப்புகளும், யூத எதிர்ப்புத் தாக்குதல்களும் அவரது வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருந்தன நேரடி தாக்குதல்: 1996ம் ஆண்டு நடைபெற்ற கோபர் கோபுர தாக்குதலில் கமேனிக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தொகுதி மாறும் ஓபிஎஸ் - ஆண்டிப்பட்டியில் போட்டியா ? திமுக தலைமை சஸ்பென்ஸ் !
உல்லாச வீடியோவை காட்டி பணம் நகை பறிப்பு - கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது !
முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து...! மகிழ்ச்சியில் முதல்வர்...!
யார் இந்த. கமேனி ? அமெரிக்கா வெறுத்தது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் என்ன?
ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் காமேனி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவல் !