by satheesh on | 2026-02-27 01:26 PM
*பச்சோந்தி ஓ.பி.எஸ். – அதிமுக கடும் விமர்சனம்!* :
அதிமுகவின் அதிகாரப்பூர்வ IT பிரிவு வெளியிட்டுள்ள பதிவு: "கூச்சமே இல்லையா @OfficeOfOPS...??!!:"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை,:ஆளாக்கி, அமைச்சராக்கி,, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு, A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து , அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில், கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையா, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர். இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு , அம்மா எல்லாம் சும்மா தானே?! உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்! இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். (பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)"
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!