| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

விஜய்க்கும் - ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர் ! வேலூரில் விஜய் ஆவேசம் !!

by satheesh on | 2026-02-24 07:20 PM

Share:


விஜய்க்கும்  - ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்  ! வேலூரில் விஜய் ஆவேசம் !!

இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையில் நடக்கும் போர் - வேலூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு :

மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? ஆட்சிக்கு முன்பிருந்த சொத்து மதிப்பு, ஆட்சிக்கு வந்த பின்பு இருக்கும் சொத்து மதிப்பை Declare பண்ண முடியுமா? சீரியஸான போட்டியில் காமெடிக்கு இடமில்லை; ஒருசிலர் அவர்களாகவே வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக் கிடக்கிறது என்கிறார்களே; கேட்கறவங்க எல்லாரும் கேசரி சாப்பிடுறவங்கன்னு நினைச்சீங்களா? எனக்கு எதிரா செய்ற ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிரா செய்ற செயல் என்பது அவர்களுக்கு தெரியாம போச்சு... விஜயும், மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும் மாதிரி பிரிக்கவே முடியாது... சென்சிடிவான Sentiment அது. இந்த தேர்தல் விஜய், ஸ்டாலின் சார் இடையே நடக்குற போர், 5 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி இல்ல, 50 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி, இது ”அதிசய தேர்தல்” இது ஒரு அதிசய தேர்தல்; இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். இந்த விஜய் ஊழலை எதிர்ப்பதால், மக்களோடு மக்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆதங்கம்; அதனால் நம்மை எதிர்க்கிறார்கள். தற்போது நடைபெறும் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக நடக்கும் போர். விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் நடக்கும் போர்தான் இந்த தேர்தல்; இதுக்கு நடுவில் NDA, டெல்லி என எதுவும் இல்லை. ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான்  எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன். தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன். மக்களை நேசிக்கும் தலைமை இல்லாததால் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர். ஏமாற்றத்தை முறியடிக்க வெகு ஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் தவெக.  முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தவெக"!


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment