அவமரியாதையை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது; எந்த அரசியல் கட்சியோடும் எனக்கு தொடர்பு இல்லை.
அரசியலில் உயர் பதவியில் இருப்பவரிடம் இருந்து அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை.
எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது.
பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளை பேசவோ, தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்கவோ வேண்டாம்.– விஜயை விமர்சிக்க தனது பெயரை நயினார் நாகேந்திரன் பயன்படுத்தியதற்கு நடிகை த்ரிஷா பதில்..
வருத்தம் தெரிவிக்கிறேன்! :
என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தை நான் அனுமதித்ததுமில்லை, பேசியதுமில்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் இதனால் யாரேனும் வருத்தப்படுவார்களானால் மனப்பூர்வமாக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
– நயினார் நாகேந்திரன், பா.ஜ.க
நடிகையின் பெயரை குறிப்பிட்டு விஜய்யை விமர்சித்த விவகாரம்.