by satheesh on | 2026-02-12 10:11 AM
இனிமேல் இந்த ஏரியாவுல விசில் ஊதக்கூடாது. தூய்மை பணியாளரின் விசிலை பிடுங்கி குப்பையில் வீசிய சிவகங்கை திமுக கவுன்சிலர் :
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காலையில் விசிலடித்து குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளரை அழைத்து ‛இனி என் வார்டில் விசில் ஊதக்கூடாது' என்று கூறி அந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல் முறையாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் விசில் ஊத தூய்மை பணியாளருக்கு திமுக கவுன்சிலர் தடை போட்டுள்ளார். அந்த கவுன்சிலரின் பெயர் அயூப் கான். இவர் சிவகங்கை நகராட்சியின் 21வது வார்டின் கவுன்சிலராக உள்ளார். வழக்கம்போல் அவரது வார்டில் இன்று காலையில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க சென்றனர். தூய்மை பணியாளர்கள் விசிலடித்து குப்பைகளை சேகரித்து வந்தனர். அப்போது அங்கு சென்ற திமுக கவுன்சிலர் அயூப் கான் தூய்மை பணியாளர் விசிலடித்து குப்பை சேகரிக்க தடை போட்டார். மேலும் தூய்மை பணியாளர் வைத்திருந்த விசிலை வாங்கி குப்பையில் போட்டார். அதன்பிறகு குப்பை சேகரிப்பு பாடலுடன் கூடிய ஸ்பீக்கரை கொடுத்தார். இனிமேல் விசிலடித்து குப்பையை சேகரிக்க கூடாது. குப்பை சேகரிப்பை அதற்கான பாடலுடன் கூடிய ஸ்பீக்கரை வைத்து தான் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்தார். இதுபற்றி திமுக கவுன்சிலர் அயூப் கான் கூறுகையில், ‛‛நான் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறேன். நம் வார்டில் காலையில் சூரியன் உதித்தவுடன் குப்பைகளை சேகரிப்பதற்காக நம்முடைய சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக வருகின்றனர். அவர்கள் வரும்போது ஊதி (விசில்)சத்தம் எழுப்புகின்றனர். இனிமேல் நம்ம வார்டில் இந்த சத்தம் வேண்டாம். அதற்கு பதில் குப்பைகளை சேகரிப்பதற்கான பாடல்களுடன் அடங்கிய ஒலிப்பான் (ஸ்பீக்கர்) வழங்கி உள்ளோம். இனிமேல் நம்ம வார்டில் அந்த (விசில்) சத்தம் கேட்கக்கூடாது. இந்த (ஸ்பீக்கர்) சத்தம் தான் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன் '' என்றார். இந்நிலையில் தான் திமுக கவுன்சிலர் விசிலை பிடுங்கி குப்பை வண்டியில் வீசியதும், அதற்கு பதிலாக ஸ்பீக்கரை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.
அகில இந்திய பொது வேலை நிறுத்தம் - பெரியகுளம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
" கள்ளக்காதல் " - போலீசார் கொடுத்த அதிர்ச்சி ! ஆடிப்போன பெற்றோர்கள் !!
"ஹேப்பி ஃபேமிலி டே " - விஷம் தடவிய கேக் தின்று குடும்பமே தற்கொலை ?
"வந்தே மாதரம் " கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு !
உலகின் பிரமாண்டமான வ.உ.சி., சிலை மதுரையில் அமைகிறது ★ 'எய்ம்பா' தலைவர் 'ஓம் சக்தி' ராமச்சந்திரன் தகவல்