| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேசிய குடற்புண் நீக்க உறுதிமொழி ஏற்பு......!!!!

by admin on | 2026-02-11 12:58 PM

Share:


தேசிய குடற்புண் நீக்க உறுதிமொழி ஏற்பு......!!!!

தேனி மாவட்டம் தேசிய  குடற்புழு  நீக்க நாள்  உறுதிமொழியை  மாவட்ட ஆட்சித்தலைவர்                       திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்கள்  ஏற்றுக்கொண்டனர்.

தேனி மாவட்டம்,  கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்                                       இன்று (10.02.2026) தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்கள்  ஏற்றுக்கொண்டனர். தேசிய குடற்புழு நீக்க தினம், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய இரண்டு தினங்கள் என 6 மாதத்திற்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.  


தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் வாழும் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் இப்பருவத்தில் குடற்புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்றும் (10.02.2026) விடுபட்ட குழந்தைகளுக்கு (Mop up day) 17.02.2026 அன்றும் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது.  1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும், 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் அங்கன்வாடி மையத்திலும் "அல்பெண்டசோல் "எனும் 

குடற்புழுநீக்கம் செய்யும் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால், குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.  இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 162 துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், 2,68,926 குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமும், 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட 68,082 பெண்களுக்கு, 1,065 ஊட்டச்சத்து மையங்களில் ஊட்டச்சத்து பணியாளர்கள் மூலமும் என மொத்தமாக 3,37,008 அல்பெண்டசோல் எனும் குடற் புழுநீக்கம் மாத்திரைகள் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படவுள்ளது.


    அந்தவகையில், இன்றையதினம் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்   தேசிய குடற்புகு நீக்க நாள் உறுதிமொழியான,  ‘குடற்ழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு, உடற்சோர்வு கற்றல் சிரமம் மற்றும் நோய் தொற்றுகளை தடுக்க முடியும் என்பதை நான் அறிவேன். மேலும், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால், உடல் வளர்ச்சி அறிவுத்திறன் மற்றும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மேம்படும் என்பதையும் நான் நன்கு அறிவேன். நானும், எனது சுற்றத்தினரும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்றும், கழிவறையை முறையாக பயன்படுத்துவோம் என்றும், சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை சோப்புடன் சுத்தமாக கழுவுவோம் என்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்றும் உறுதியளிக்கிறேன். குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்வதின் மூலம், குடற்புழு தொற்றில்லா. இரத்த சோகை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க  ஒத்துழைப்பேன் என்று  உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.     குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், பெண்கள் ஆகியோர் தவறாமல் குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரைகளை உட்கொண்டு, உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், அப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.  இந்நிகழ்வில் மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் திருமதி செல்வி, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ரேவதி, வட்டார மருத்துவ அலுவலர் திருமதி கலைச்செல்வி, நலக்கல்வியளர் திரு.சுப்பிரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்  உட்பட

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment