by admin on | 2026-01-31 04:07 PM
தேனி மாவட்டம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (31.01.2026) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு விழா ‘இது நம்ம ஆட்டம் – 2026’ மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, கோலப்போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ”இது நம்ம ஆட்டம் – 2026” போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா - இது நம்ம ஆட்டம் – 2026 மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள், கோலப்போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் பிரிவு (கை, கால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியர், செவித்திறன் குறைபாடுடையோர் – 100மீ ஓட்டமும், பார்வை குறைபாடுடையோர் (குண்டு எறிதல்) - பெண்கள் பிரிவு (கை, கால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியர், செவித்திறன் குறைபாடுடையோர் – 100மீ ஓட்டமும், பார்வை குறைபாடுடையோர் (குண்டு எறிதல்) உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.4,000/-மும், மூன்றாம் பரிசாக 2,000/- மும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சியாமளா தேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!