by satheesh on | 2026-01-26 08:22 PM
வெறும் 35 வாக்குகள் தான்... அமித்ஷா போட்ட வியூகம்... திமுக தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமையான கூட்டணியாக சமீபத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற சென்னை பொதுக்கூட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த பின்பே இந்த கூட்டணி வலுவான கூட்டணியாக பார்க்கப்படுகிறது, காரணம் திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாச வாக்குகளை விட அதிகமாகவே டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் வாக்குகளை பிரித்து வைத்திருந்தார். அந்த வகையில் தற்பொழுது டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த பின்பு ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக அமைந்துள்ளது. மேலும், சமீபத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்து ஒரே எதிரி திமுக தான் என்பதை பிக்ஸ் செய்து அரசியல் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அமித்ஷா நேரடியாக தமிழக அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி களம் இறங்கியதின் விளைவாகவே அடுத்தடுத்து பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வலுவான கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, அடுத்தடுத்து பல கட்சிகளுடன் தொடர்ந்து அவர் தரப்பு மூலம் பேசி வந்தார், ஆனால் அடுத்தடுத்து பீகார் சட்டமன்றத் தேர்தல் மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் என்று அமித்ஷா பிஸியாக இருந்ததால் மற்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி இணைவதில் தாமத ஏற்பட்டது. இந்த நிலையில் பீகார் சட்டமன்றம் மற்றும் மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலை முடித்துவிட்டு தற்பொழுது தன்னுடைய முழு கவனத்தையும் தமிழகத்தை பக்கம் அமித்ஷா திருப்பி இருக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் என ஒவ்வொருவராக தேசிய ஜனநாயக கூட்டணியில இணைந்து கூட்டணியை பலப்படுத்தி இருக்கிறார்கள். அமித்ஷாவின் நோக்கம் சிறு சிறு கட்சிகள் கூட கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று விடக்கூடாது என்பதுதான் முக்கியமாக பார்க்க படுகிறது. மேலும் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாக்கு வித்தியாசம் வெறும் 35 லட்சம் தான் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் டிடிவி தினகரன் கைவசம் இருக்கும் 25 வாக்குகள் ஒன்று சேர்ந்து மேலும் ஜான்பாண்டியன் பூவை ஜகன் மூர்த்தி போன்ற பட்டியல் சமூக தலைவர்களின் வாக்குகளும் ஒன்றிணையும் பட்சத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் எளிதாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு பகுதிகளில் அதிமுக மொத்தமாக வெற்றி பெற்றாலும், சென்னையில் திமுக மொத்தமாக வெற்றி பெற்றாலும் கூட தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய தென்மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை தவிர்த்து மற்ற சட்டமன்றங்களில் பெரிதாக யாரும் வெற்றி பெறவில்லை, இதற்கு முக்கிய காரணம் டிடிவி தினகரன் பிரித்த வாக்குகள் தான். அதை கருத்தில் கொண்டு தான் அமித்ஷா டிடிவி தினகரனை கூட்டணிக்கு கொண்டு வந்து தற்போது கூட்டணியை பலப்படுத்தி இருக்கிறார். மேலும் ஓபிஎஸ் அடுத்து விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !