| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மௌனம் காக்கும் ஓபிஎஸ் - தனிமையில் விடப்பட்ட அவலம் - கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்.!

by satheesh on | 2026-01-24 10:45 PM

Share:


மௌனம் காக்கும் ஓபிஎஸ்  - தனிமையில் விடப்பட்ட அவலம்  - கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்.!

எங்கும் சேர முடியாமல் – யாரும் விரும்பி ஏற்க முடியாமல் - தனிமைப்பட்டுப் போனார் ஒ.பி.எஸ்!.ஒபிஎஸ் அணியில் மிஞ்சிருந்த குன்னம் ராமச்சந்திரனோ, கண்ணியமாக அரசியலுக்கே குட்பை சொல்லிவிட்டார். சர்க்கரை  ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ' என்பார்கள். இலுப்பை பூவாக  அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர் தான் ஒ.பி.எஸ்!  இதனால் தானே சர்க்கரையாகிவிட்டதாக  இறுமாப்பு கொண்டு இருக்கின்ற இருப்பையும் தற்போது இழந்து, ஒற்றை  மரமானார்! 'அதிமுகவில் எங்களை சேர்க்க வேண்டும்' என்று அமித்ஷா மூலம் அழுத்தம் தந்து வந்த ஒ.பி.எஸ், அது கை கூடாததால் திமுகவில் சேர தூதுவிட்டார்.  ஆனால், திமுகவில் துணை முதல்வர் கேட்க முடியாது என்பதால், ''நான் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவன். ஆகவே எனக்கு துரை முருகனுக்கு இணையாக இணை பொதுச் செயலாளர் பதவி வேண்டும்'' என்றவுடனே திமுகவின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. 'அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்பதே ஒ.பி.எஸ்சின் ஒரே எதிர்பார்பாக இருந்தால், அது என்றோ இயல்பாக நடந்தேறி இருக்கும். ஆனால், அவர் அதிமுக தலைமை மீதான எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கிவிட்டு திறந்த மனதோடு வரமாட்டாமல், சில நிபந்தனைகளையும் விதித்ததால் தடை பட்டுப் போனது..! ''சரி, அதிமுக மீதான வழக்குகளை வாபஸ் வாங்கிட்டு  போய்விடலாமே'' என்ற பாஜகவின் அட்வைஸையும் ஒபிஎஸ் ஏற்க மறுத்துள்ளார். ''அப்படின்னா, டி.டி.வி.தினகரனைப் போல ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்குள் வரலாம்'' என்பதையும் ஒ.பிஎஸ் செய்யவில்லை. பாஜகவும் அவரை கைவிட்டுவிட்டது. தனிக்கட்சி என்றால், அதுக்கு செலவழிக்கணும், ஊர் ஊராகச் சென்று ஆதரவாளர்களை அணிதிரட்டி பொறுப்புகள் வழங்கி,  நிர்வாகிக்கான உழைப்பத் தர  வேண்டும். உழைப்பிற்கும் தயாரில்லை. சேர்த்த பணத்தில் சற்று இழப்பதற்கும் தயாரில்லை என ஒ.பி.எஸ் இழுத்துக் கொண்டே போனார். ஒ.பி.எஸ்சுக்காக இது வரை நிறைய செலவு செய்த ஜே.சி.டி பிரபாகரன் த.வெ.க சென்றுவிட்டார்.  வழக்குகளுக்காக ஒ.பிஎஸ்சிடம் பணத்தை ஓயாமல் கறந்து கொண்டிருந்த மனோஜ் பாண்டியன் இனி இங்கு எதிர்காலமில்லை என திமுகவிற்கு தாவினார். ''சரி தனிகட்சி ஆரம்பிச்சால் எவ்வளவு சீட் தருவீங்க'' என திமுகவிடம் தூதுவிட்டார். அவர்களோ, ''உங்களுக்கு ஒரு சீட்டு, வைத்தியலிங்கத்திற்கு ஒரு சீட். அதுக்கு மேல எதையும் எதிர்பார்க்காதீங்க'' என்றனர். அதிலும் முடிவெடுக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார். ஆகையால் வைத்தியலிங்கம் திமுகவிற்கு போய்விட்டார். இதற்கிடையில் ஒ.பி.எஸின்  ஆதரவாளர்கள் பலர் மூன்று முறை அதிமுக முதல்வராகும் வாய்ப்பு பெற்ற ஒ.பி.எஸ் திமுகவில் சேர முயன்றதை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்துவிட்டார்கள். இரண்டுங்கெட்டான்,ஒட்டுண்ணி,  உழைக்கத் தயாரில்லாத சோம்பேறி, அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழும் அழுகுண்ணி… இவை எல்லாவற்றுக்குமான ஒரு மனிதரைப் பார்க்க வேண்டும் என்றால் அது ஒ.பி.எஸ் தான். அவரை நம்பிச் சென்ற பற்பலரும் காலப்போக்கில் தான் இவர் நம்மை வழி நடத்திச் செல்லும் தலைவர் அல்ல. நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்…எனக் கூட்டிலிருந்து சிறகு விரித்து ஒருவரையடுத்து ஒருவராக பறந்தார்கள்! அரசியல் என்பது போராட்டக் களம். அதில் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு தன்னிகரில்லாத் தகுதியும், ஓயாத உழைப்பும் தேவை..என்ற விதிக்கு மாறாக  மூன்று முறை இவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசி முதலமைச்சர் ஆசனத்தில் உட்கார வைத்தது ஆரம்பத்தில் தகுதி இல்லை என்றாலும், வாய்ப்பு கிடைத்த பிறகு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வர் சிலர். ஆனால், அதுவும் இவரிடம் இல்லை. இன்னும் சொல்வதென்றால், 'ஒரு போதும் இவர் தன்னை தகவமைத்துக் கொள்ளமாட்டார். அடிமை விசுவாசியாகவே தொடர்வார்' என்பதால் தான் ஆபத்து நேரங்களில் அரியணையில் எடுத்து வைக்கப்படும் பொம்மையாக ஜெயலலிதா ஒ.பி.எஸ்சை பயன்படுத்தினார். மூன்றாவது முறை  இதே காரணத்திற்காக முதல்வாராகும் வாய்ப்பு ஒ.பி.எஸ்சுக்கு பாஜக நிர்பந்தத்தால்  வழங்கப்பட்டது. தனக்கென்று தனித் தன்மையோ, திறமையோ, ஆதரவாளர்களை அரவணைத்துக் கொண்டு செல்லும் பண்போ, வளர்த்து, வாழ வைத்த கட்சியை அடுத்தவனிடம் காட்டிக் கொடுக்க கூடாது என்ற குறைந்தபட்ச நாணயமோ கூட  இல்லாமல் - கடைசி வரை நோகாமல் நொங்கு திங்க விரும்பிய - ஒ.பி.எஸ்சை காலம் தண்டித்துவிட்டது. ஆதரவாளர்களின் குமுறல் ...!



இணை ஆசிரியர்  ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment