| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பாம்பு கண்ணனுக்கு விருது வழங்கி அங்கீகரிக்க வேண்டும் . இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை...!!!

by admin on | 2026-01-24 10:08 PM

Share:


பாம்பு கண்ணனுக்கு விருது வழங்கி அங்கீகரிக்க வேண்டும் . இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை...!!!

சமூக சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

தேனி மாவட்டம், தேனி நகர் PC பட்டி பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்றழைக்கப்படும் “பாம்பு கண்ணன்” அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறார். பாம்பு நடமாட்டம் குறித்த “எங்கள் பகுதியில் பாம்பு இருக்கிறது, நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம், எங்களை காப்பாற்றுங்கள் என்று செல்போனில் குரல் கேட்ட மாத்திரத்தில்,bஎந்த தயக்கமும் இன்றி உடனே சம்பவ இடத்துக்கு ஓடிச் செல்வத அவரின் இயல்பான கடமை உணர்வாக உள்ளது.bமிகவும் விஷமுள்ள பாம்புகளையும்bபயம் அறியாமல் பிடித்து,bஅவற்றை யாருக்கும் ஆபத்து இல்லாத வகையில்vவனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதைbதன் வாழ்நாள் கடமையாகவே அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சேவைக்காக அவர் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மனித நேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரிய செயலாகும். வரும் ஜனவரி 26 – குடியரசு தின விழாவிலv“அண்ணா விருது” வழங்கப்பட உள்ளதாகbமுன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது விருது பெறும் பட்டியலில்vதன் பெயர் இடம்பெறவில்லை என்பதால் அவர் மனவருத்தத்தில் உள்ளார். இந்நிலையில், கண்ணன் அவர்கள் செய்துவரும் நீண்ட கால மனிதநேய சேவைக்குbஅங்கீகாரம் வழங்குவதுbஒரு தனிநபருக்கான மரியாதை மட்டுமல்ல;சமூக சேவையை ஊக்குவிக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே,தேனி மாவட்ட நிர்வாகம் அவரது தியாகமும் சேவையும் கருத்தில் கொண்டு,உகந்த விருது வழங்கிகௌரவிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணிமிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் விண்ணப்பித்து கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம்bஅவர் செய்த சேவைக்கு கிடைக்கும் உயர்ந்த பெருமையாகவும், மற்ற சமூக சேவகர்களுக்கும்bஊக்கமாகவும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முகநூல் நண்பர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்.


இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment