| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை...! சீமான் அதிரடி பேட்டி...!

by Vignesh Perumal on | 2026-01-24 12:02 PM

Share:


எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை...! சீமான் அதிரடி பேட்டி...!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது கட்சியின் தனித்துவமான அரசியல் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தேர்தலில் தவெக (விஜய்) வருகை மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "தமிழக அரசியலில் எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. இந்தியாவில் பூமிக்காகவும், வருங்காலத் தலைமுறைக்காகவும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்தான். மற்றவர்கள் எல்லாம் அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கிறார்கள், நான் மாற்றத்தை உருவாக்க நினைக்கிறேன். அதனால் எனக்கு யாரைப் பார்த்தும் அச்சமில்லை."

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் 'பரந்தூர்' திட்டம் குறித்து அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

சென்னையில் தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் நகரத்தின் தேவைக்கு அவசியமானது. அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தவறில்லை."

ஆனால், விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்துப் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது என்பது தேவையற்றது; அது ஒரு பேராசை. 1000 நாட்களுக்கும் மேலாகப் போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. பறப்பதற்குப் போதுமான விமானங்கள் இல்லாத போது, எதற்கு இத்தனை ஏக்கரில் புதிய ஏர்போர்ட்?" எனக் கேள்வி எழுப்பினார்.

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகளைச் சாடிய அவர், "60 ஆண்டுகளாகியும் தலைநகர் சென்னையில் ஒரு மழை பெய்தால் தண்ணீர் வடிய வழியில்லை. ஒவ்வொரு முறையும் வெள்ளம் வந்த பிறகுதான் கால்வாய் தோண்டுகிறார்கள்."

"அரசு ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசியை எந்த அமைச்சராவது சாப்பிடுகிறாரா? தரமற்ற அரிசியை ஏழை மக்களுக்கு வழங்கிவிட்டு, அதனைச் சாதனை என்று சொல்வது என்ன நியாயம்?" என ஆவேசமாகப் பேசினார்.

2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், "நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை. மக்களுடன் மட்டும்தான் எங்கள் கூட்டணி. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றமாக நாம் தமிழர் கட்சி இருக்கும்" எனத் தெரிவித்தார்.

யாருமே போட்டி இல்லை; கொள்கையில் தனித்துவம். பரந்தூர் ஏர்போர்ட் பலஇது தேவையற்றது, விவசாய நிலங்களை அழிக்கும் 'பேராசை'.  | 60 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் அடிப்படைப் பிரச்சனைகள் தீரல்ல விளையாட்டு தனித்துப் போட்டி; மாற்று அரசியல். |











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment