by satheesh on | 2026-01-24 11:16 AM
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.! "இன்று இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க".. முக்கிய அறிவிப்பு. :
சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.24) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜனவரி மாதத்திற்கான முகாம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சென்னைப்பகுதியிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜன. 24) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் (Ration Card) கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். புதிய பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல். நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்குப் பொருட்களைப் பெற 'அங்கீகாரச் சான்று' வழங்குதல். மேலும், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்துப் பொதுமக்கள் தங்களது புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம். இப்புகார்கள் மீது விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, சென்னையின் 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோன்று தமிழகம் முழுவதிலும் இன்று முகாம் நடைபெறவுள்ளது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!