by admin on | 2026-01-23 06:29 PM
தேனி மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 277 வேலைநாடுநர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை அறிவியல் மற்றும் கல்லூரியில் இன்று (23.01.2026) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் 277 வேலைநாடுநர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொண்டு, தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும், தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் (கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் 2.0) கீழ் ட்ரோன் ஆப்ரேட்டர், மொபைல்போன் டெக்னீசியன், CNC இயக்கம், செவிலியர் பயிற்சி, ஜீனியர் சாப்ட்வேர் டெக்னாலாஜி, Al அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி, வேர் ஹவுஸ் மேற்பார்வையாளர், ICB ஆப்ரேட்டர், சோலார் டிவி அமைத்தல், வெல்டிங் அட்வான்ஸ் பேட்டன் மேக்கர், மெடிக்கல் டெக்னீசியன் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதனை கிராமப்புற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றையதினம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்முகாமில் தெரிவுசெய்யப்பட்ட 277 வேலைநாடுநர்களுக்கு தனியார்துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளையும், 89 வேலைநாடுநர்களுக்கு திறன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ரமாபிரபா, கல்லூரி முதல்வர் திருமதி உமாதேவி மற்றும் கல்லூரி தாளாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!