by admin on | 2026-01-23 04:22 PM
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதியில் இன்று (23.01.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை அனுசரிக்கப்படுகிறது. ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளைக் கண்டிப்பாகக் கடைபிடித்திட வேண்டும். விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். பாதசாரிகள் சாலையின் இடது புறமாக எப்போதும் சென்றிட வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சீட்பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். குடிப்போதையில் வாகனத்தினை இயக்குதல் கூடாது. சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடக்க வேண்டும். பேருந்தில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தினை இயக்கக்கூடாது. குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனங்களை முந்துதல் கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிகொடுக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் அதிக ஒலி எழுப்பக்கூடாது எனவும், சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக தேனி மாவட்டத்தை மாற்றிட அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் முழுஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கு வகையில் கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பை தவிப்பீர், மித வேகம் மிக நன்று, மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இப்பேரணியானது பங்களாமேடு பகுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக நேரு சிலை வரை சென்று மீண்டும் பங்களாமேடு பகுதியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், கோட்டப் பொறியாளர்கள் திருமதி வரலெட்சுமி (சாலை பாதுகாப்பு அலகு), திரு.குமணன் (நெடுஞ்சாலைத்துறை), முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், உதவி கோட்டப் பொறியாளர்கள் திருமதி நந்தினி, திரு.திருக்குமரன், திரு.ராமமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார், உதவிப் பொறியாளர்கள் திருமதி ஐஸ்வர்யா, திரு.இராஜசேகரன் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!