| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

கட்சியிலிருந்து நீக்கம்...! டி.டி.வி. கடும் காட்டம்..!

by Vignesh Perumal on | 2026-01-23 10:56 AM

Share:


கட்சியிலிருந்து நீக்கம்...! டி.டி.வி. கடும் காட்டம்..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த கடம்பூர் ஜமீன் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று (ஜனவரி 23, 2026) அறிவித்துள்ளார்.

அமமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டது.

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது.

கழகக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டது.

இந்தக் காரணங்களினால், எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

தொண்டர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, தனது அறிக்கையின் இறுதியில் டி.டி.வி. தினகரன் மிகத் தெளிவாக ஒரு எச்சரிக்கையைத் தொண்டர்களுக்கு விடுத்துள்ளார்.

"கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் (மாணிக்கராஜா) எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

அமமுகவின் தென் மண்டல முகமாகவும், டி.டி.வி. தினகரனின் நிழலாகவும் வலம் வந்த மாணிக்கராஜா நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மாணிக்கராஜா திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், இன்று அவர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் திமுகவில் இணைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, கட்சித் தாவல் புகாரின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் இந்த அதிரடி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் மூலம் "அவரே விலகிச் செல்லவில்லை, நாங்கள்தான் நீக்கினோம்" என்ற செய்தியைத் தொண்டர்களுக்கு டி.டி.வி. தினகரன் உணர்த்தியுள்ளார்.


தென் மாவட்டங்களில், குறிப்பாகத் தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதிகளில் அமமுகவின் தேர்தல் வியூகங்களில் முக்கியப் பங்காற்றியவர் மாணிக்கராஜா. அவரது நீக்கம் அந்தப் பகுதியில் கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்களது அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராகத் திமுக அல்லது அதிமுகவிற்குச் செல்வது 2026 தேர்தலுக்கான அமமுகவின் பலத்தைக் குறைக்கும் செயலாகக் கருதப்படுகிறது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment