by satheesh on | 2026-01-22 08:08 PM
டெல்லியில் நடைபெற உள்ள 77வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க விவிஐபி ஆக பெரியகுளம் மலைகிராம தம்பதிக்கு அழைப்பு :
தேனி மாவட்டம் ; பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை கிராமத்தைச் சேர்ந்தவர் பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன். இவருடைய மனைவி கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மலைத் தொடர்களில் வசிக்கும் புலையர் மற்றும் இரவாளர், முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார்.
மேலும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், அரசு மானியங்களைப் பெற்றுத் தருதல், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குச் சூரியசக்தி விளக்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.
வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரிடையாக மக்களுடன் சந்தித்து, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்.
இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது .
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!