by satheesh on | 2026-01-22 06:25 PM
நெல்லை சரகத்தில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்: டி.ஐ.ஜி உத்தரவு ;
நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட 8 காவல் ஆய்வாளர்களை (Taluk) உடனடியாக பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி (DIG) இன்று உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்ற விவரங்கள்:
E. சாம்சன்: தென்காசி மாவட்ட குற்றப் பிரிவு ஆவணக் காப்பகத்திலிருந்து (DCRB), கன்னியாகுமரி மாவட்ட NSD (நக்சல் தடுப்பு பிரிவிற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
S. சத்திய பாமா: கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து (AWPS), தென்காசி மாவட்ட DCRB பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். U. ஜென்சி: நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து (PEW), கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றப்பட்டுள்ளார். K. சுதாகர்: கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவிலிருந்து, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். S. யேசுராஜசேகரன்: தூத்துக்குடி வடக்கு குற்றப்பிரிவிலிருந்து, தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். M. மணிகண்டன்: குளத்தூர் காவல் நிலையத்திலிருந்து, எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். S. செந்தில்வேல் குமார்: எட்டயபுரம் காவல் நிலையத்திலிருந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். M. ரென்னிஸ்: ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலிருந்து, குளத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட மற்றும் பணியில் சேர்ந்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!