by Vignesh Perumal on | 2026-01-22 01:24 PM
திருப்பூரில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த கவிஞர் வைரமுத்துவை நோக்கி பெண் ஒருவர் செருப்பு வீசியது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் உள்ள 'கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (ஜனவரி 22, 2026) திருப்பூர் வருகை தந்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வைரமுத்து வந்தபோது, அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அவருக்குச் சால்வை அணிவித்து, மலர் மாலைகள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, கூட்டத்தில் திடீரென புகுந்த ஒரு பெண், தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி வைரமுத்துவை நோக்கி வீசினார்.
செருப்பு வீசப்பட்டபோது வைரமுத்து வழக்கறிஞர்கள் சூழ நின்றிருந்தார். நல்லவேளையாக அந்தச் செருப்பு வைரமுத்து மீது படாமல், அவருக்கு அருகிலிருந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில் போய் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள், உடனடியாக வைரமுத்துவைப் பாதுகாப்பாகச் சூழ்ந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
செருப்பு வீசிய பெண்ணைப் பிடித்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண்மணியின் பெயர் ஜெயா (50) என்பது தெரியவந்தது.
அவர் நீண்ட நேரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து, தனது நீண்ட காலக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வைரமுத்துவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்டத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், கையில் இருந்த செருப்பை வீசியதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செருப்பு வீசிய பெண்ணை போலீசார் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வைரமுத்து தரப்பிலிருந்தோ அல்லது வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. இருப்பினும், பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
ஆசிரியர்கள் குழு....
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!