by Vignesh Perumal on | 2026-01-22 12:45 PM
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஜனவரி 22) காலை, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்தளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
"நாளை மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்பார்கள். இது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், அவர் தமிழகத்தில் பங்கேற்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இதுவாகும்.
பியூஷ் கோயல் உடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய ஈபிஎஸ், "இந்தக் கூட்டம் வலுவான ஒரு கூட்டணிக்கு அடித்தளமாக அமையும். அதிமுக - பாஜக - பாமக - அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஓரணியில் திரண்டுள்ளோம்" என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்துவதற்கான தொடக்கப் புள்ளியாக மதுராந்தகம் மேடையை அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன.
மேடையில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 லட்சம் பேர் கூடும் என்பதால், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இதற்கான பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் திமுக அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை அதிமுக முன்னெடுத்துள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றுவதன் மூலம் தனது 'முதல்வர் வேட்பாளர்' அந்தஸ்தையும், கூட்டணியின் பலத்தையும் நிரூபிக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"