| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...! தனியார் மில்லுக்கு சீல்...! 6 பேர் அதிரடி கைது..!

by Vignesh Perumal on | 2026-01-22 12:34 PM

Share:


40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...! தனியார் மில்லுக்கு சீல்...! 6 பேர் அதிரடி கைது..!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனைத் தனியார் ஆலைகளில் பாலிஷ் செய்து வெளிச்சந்தையில் விற்க முயன்ற கும்பலைத் தனிப்படை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள கோட்டப்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் அரிசி அரவை மில்லில், பெருமளவில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட தனியார் மில்லில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது மில்லுக்குள் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, சுமார் 40,000 கிலோ (40 டன்) எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரிசியைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையில் சம்பந்தப்பட்ட அரிசி அரவை மில்லுக்கு அதிரடியாகச் சீல் வைக்கப்பட்டது.

இந்தக் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக, பிரசாத்குமார் (32) - பல்லடம்,

ராம்குமார் (26) - கரூர், சந்திரசேகர் (53)- ராமநாதபுரம், சின்ராசு (20) - சவேரியார்பாளையம், அஜய் (27) - சவேரியார்பாளையம், சுப்பிரமணி (58)- அய்யலூர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியைக் குறைந்த விலைக்குச் சேகரித்து, அதனைத் தனியார் மில்லில் அரைத்துப் புதிய பைகளில் அடைத்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குப் பின்னால் பெரிய அளவில் நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா? அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்தும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment