| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம் 2026...!!!

by admin on | 2026-01-21 08:09 PM

Share:


முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம் 2026...!!!

முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா ”இது நம்ம ஆட்டம் – 2026 ” அனைத்து ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் 

25.01.2025 (ஞாயிறு) மற்றும் 27.01.2026 (செவ்வாய்) ஆகிய நாட்களிலும்

 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 30.01.2025(வெள்ளி) அன்றும் நடைபெறவுள்ளது. 

போட்டிகளின்விவரங்கள், ஊராட்சி ஒன்றிய அளவில் (தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் –(ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் - (ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து -(பெண்களுக்கு மட்டும்) மொத்தமாக 7 வகையான போட்டிகள் , 

1. போடி–இசட்.கே.எம்.மேல்நிலைப்பள்ளி,  

2. சின்னமனுார் – கிருஷ்ண ஐயர் மேல்நிலைப்பள்ளி

3. உத்தமபாளையம் – எஸ்.யு.எம் மேல்நிலைப்பள்ளி 

4. கம்பம் - சி.பி.யு. மேல்நிலைப்பள்ளி

ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் 25.01.2026 (ஞாயிறு) அன்றும் 

1. பெரியகுளம் – அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி 

2. கடமலைக்குண்டு (மயிலாடும்பாறை) – ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி

3. ஆண்டிப்பட்டி – அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி  

4. தேனி – மாவட்ட விளையாட்டு அரங்கம் – 27.01.2026 (செவ்வாய்) அன்றும்

ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றியளர்கள் உட்பட மாவட்ட அளவில் (தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல்.- ஓவியப் போட்டி,(ஆண்கள்/பெண்கள்) கோலப்போட்டி–(பெண்களுக்கு மட்டும்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) எறிபந்து (பெண்களுக்கு மட்டும்), மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உறுப்பு சார் குறைபாடு உடையோர் (100மீ), பார்வைத்திறன் குறைபாடு உடையோர் (குண்டுஎறிதல்), அறிவுசார்திறன் குறைபாடு  உடையோர் (100மீ), காதுகேளாதோர் (100மீ) என 13 வகையான போட்டிகள் 

30.01.206 (வெள்ளி) அன்று  மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 

ஆன்லைன் மூலம் பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள வீரர்/வீராங்கனைகள் தங்களுக்கான அடையாள ஆதார் கார்டு,/ குடும்ப அடையாள அட்டை(ரேசன் கார்டு) மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (ID card)  மற்றும்  ஆதார் கார்டு/ குடும்ப அடையாள அட்டை(ரேசன் கார்டு) ஆகிய  தங்களுக்குரிய பிரிவு விளையாட்டு நாட்களில் 

நேரில் வரும் பொழுது கண்டிப்பான முறையில் கொண்டு வரவேண்டும். மேலும், தங்கள் விளையாட்டு பிரிவுகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் (Play Kit)  கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும். 

நிபந்தனைகள்:

1. இணையதள பதிவு செய்த வீரர்கள்/அணிகள் தவறாமல் போட்டி நடைபெறும் நாட்களில் காலை 10.30 மணிக்குள் பங்கேற்க வேண்டும்.  தவறும் பட்சத்தில் அனுமதி இல்லை.

2. நிகழ்விட பதிவு (Spot Entry)  அனுமதி உண்டு (போட்டி நடைபெறும் நாட்களில் காலை 10.30 மணிக்குள் பங்கேற்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதி இல்லை)

3. கண்டிப்பான முறையில் தாங்கள் சார்ந்திருக்கும் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

இப்போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் தேனி மாவட்ட விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் கலந்து கொண்டு பரிசு பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment