by admin on | 2026-01-21 07:51 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்
இன்று (21.01.2026), ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.01.2026-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்பு தீவிரத்திருத்தம் பணிகளில் கடந்த 19.12.2025-அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (படிவம்-6), நீக்கம் செய்ய
(படிவம்-7), முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், தொகுதி மாற்றம் (படிவம்-8) போன்றவற்றிற்கு குறிப்பிட்ட படிவங்களில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தினை இணைத்து வாக்குச்சாவடி மைய அலுவலரிடமும் (DLO), அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள்/வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள்/ வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனவும், நேரில் வர இயலாதவர்கள் Voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் Voter Helpline App மூலமாகவும் 18.01.2026 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.01.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் மேற்கொள்ள வாக்காளர்களால் உரிய படிவங்களில் பூர்த்தி செய்து வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், முதல்முறை வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையிலும் மற்றும் தகுதியான எந்த ஒரு வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடாத வகையிலும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் / பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., வாக்காளர் பதிவு அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / நகராட்சி ஆணையாளர் திருமதி முத்துலெட்சுமி (கூடலூர்), உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் திரு.ஜாஹிர் உசேன்(ஆண்டிபட்டி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் !!
புதிய சகாப்தம்.., தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்பு; இடைக்கால அரசு கலைப்பு...!
தமிழக அரசியலில் திருப்புமுனை...! 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில்...!
பைக்குகளை சரக்கு வாகனங்களாக மாற்றினால் கடும் நடவடிக்கை ! போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை !!
திண்டுக்கல்லில் பரபரப்பு..! காணாமல் போன முதியவர் பிணமாக மீட்பு..!