by satheesh on | 2026-01-21 04:54 PM
உதயநிதி பேச்சு வெறுப்பு பேச்சே: உயர் நீதிமன்ற மதுரை கிளை. சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக கட்சி, வரலாறாகவே இந்துமதத்திற்கு எதிரான சிந்தனைக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியது.மேலும், வெறுப்பு பேச்சைத் தொடங்குபவர்கள் பல நேரங்களில் தண்டனை இன்றி தப்பிச் செல்கிறார்கள் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
இணை ஆசிரியர் ;N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !