by admin on | 2026-01-21 02:59 PM
கிராமங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கலெக்டர் மாவட்ட திட்ட அதிகாரி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் பதவியில் வகித்து வருகின்றனர், ஆனால் இவர்களின் காதுகளில் அடிப்படைத் தேவை என்ன என்பதை மக்கள் கழுதையாக கத்தினாலும் இவர்கள் காதுகளில் ஒலிப்பதில்லை. இவர்களுக்கு தேவை கமிஷன் மட்டுமே, ஒப்பந்ததாரர்களை வளர்த்து விட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு கமிஷன் வேண்டும், இந்த அவல நிலைதான் தற்போது தமிழகம் முழுவதும் நிலவுகிறது, இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி கிராம மக்கள் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினர். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவர்கள் அதிகாரிகளை அழைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி அறிவுரை கூறி வழங்கி உள்ளார்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜி.கல்லுப்பட்டி கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களது தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமலிருப்பதாகவும், தெருக்களில் குப்பைகள் குவிந்து உள்ளதாகவும், மேலும் மனுதாரர் வசித்து வரும் தெருவில் சிமெண்ட் சாலை வசதியின்றி பொதுமக்கள் நடைபாதையில் கழிவுநீர் தேங்குவதாகவும், மேலும் வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்குவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
எனவே தங்களது தெருவில் குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, சிமெண்ட் சாலை வசதியை ஏற்படுத்தித் தருமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் மாண்புமிகு தேனி, நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை சமர்ப்பித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மேற்கண்ட மனுவினை பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கழிவுநீர் கால்வாயினை சுத்தம் செய்து, குப்பைகளைஅகற்றித் தருமாறும், மேலும் மனுதாரரின் நீண்ட நாட்களாக கோரப்பட்டு நிலுவையிலிருந்த சிமெண்ட் சாலை அமைப்பினை ஜி.கல்லுப்பட்டி கிராமம், வடக்குத் தெருவிற்கு அமைத்து தருமாறு மாண்புமிகு தலைவர்/ மாவட்ட நீதிபதி, நிரந்தர மக்கள் நீதிமன்றம், தேனி திருமதி A.K.K. ரஜினி.,B.L., அவர்களால் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),பெரியகுளம், உதவிபொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை, பெரியகுளம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற செயலாளர், ஜி.கல்லுப்பட்டி கிராமம் ஆகிய அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்கண்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்படுத்தித் தருவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு, பணி நிறைவடைந்த பின்னர் புகைப்படத்துடன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின்படி ஜி.கல்லுப்பட்டி கிராமம்; வடக்குத்தெருவைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு. அதன் புகைப்படம் மற்றும் முழு அறிக்கையை உரிய அதிகாரி இன்று (20.01.2026) நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார் என மாண்புமிகு தலைவர்/ நிரந்தர மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி திருமதி A.K.K. ரஜினி.,B.L., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர் 9842337244
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!