| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

10 ஆண்டு கால காத்திருப்பு...! உருக்கமான கோரிக்கை...!

by Vignesh Perumal on | 2026-01-09 11:30 AM

Share:


10 ஆண்டு கால காத்திருப்பு...! உருக்கமான கோரிக்கை...!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு மதுரையில் தங்கியிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் 'வலது கரம்' என்று அழைக்கப்படும் மதுரை மன்னன் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த இரு தினங்களாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மதுரையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரைச் சந்திக்க மன்னன், முபாறக் மந்திரி, இசக்கி முத்து ஆகிய மூவர் அனுமதி கோரியிருந்தனர். இருப்பினும், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களால் மன்னனுக்கு மட்டும் முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியில் எவ்விதப் பொறுப்பும் இன்றி ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த மன்னன், முதலமைச்சரிடம் ஒரு உருக்கமான கோரிக்கை மனுவை அளித்தார்.

"இத்தனை ஆண்டுகளாகக் கழகத்தின் மீது பற்றுடன் காத்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது மீண்டும் கட்சிப் பணிகளைச் செய்ய எங்களுக்கு உத்தரவிடுங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணன் அழகிரியுடன் பயணித்த காரணத்திற்காகப் பல ஆண்டுகளாகத் தங்களை ஒதுக்கி வைப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அதனைப் போக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரைக்கு வந்தபோது, அண்ணன் மு.க. அழகிரி இல்லத்திற்குச் சென்றிருந்தார். அந்தச் சந்திப்பின் போதே, "மன்னன் உள்ளிட்ட எனது பழைய ஆதரவாளர்கள் விசுவாசமானவர்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து, கழகப் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று அழகிரி நேரடியாகவே முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் முதலமைச்சரை மன்னன் நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியோடு காத்திருக்கும் இவர்களை மீண்டும் திமுகவில் முழுமையாக இணைத்துக் கொள்வது, தென் மாவட்டங்களில் கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.







ஆசிரியர்கள் குழு....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment