by satheesh on | 2026-01-08 08:31 PM
பீகார் மாநிலத்த்தில் உள்ள நகைக் கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால், நகைக்கடைக்குள் ஹிஜாப், நிகாப், பர்தா, முகமூடிகள் அல்லது தலைக்கவசங்கள் அணிந்தவர்கள் உட்பட, முகம் முழுமையாகவோ அல்லது பாதி பகுதியாகவோ மறைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநிலத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பி (AIJGF) அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹிஜாப், முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்தபடியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் என கடை சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடை நடவடிக்கை, இன்று (08-01-26) முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே மாநிலத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தங்கள் கடைகளுக்கு வெளியே இவ்வாறு ஹிஜாப் உள்ளிட்டவற்றை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை கடை உரிமையாளர்கள் வைத்துள்ளனர். இதற்கிடையில், பாட்னாவில் உள்ள கடைகளுக்கு வெளியே எச்சரிக்கையுடன் கூடிய சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், ‘ஒரு வாடிக்கையாளர் முகத்தை மூடி வைத்திருந்தால், எந்த வாங்குதலும் அல்லது விற்பனையும் அனுமதிக்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!