| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு - " இது நம்ம ஆட்டம் " - தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல் ;

by satheesh on | 2026-01-08 07:27 PM

Share:


முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு  - " இது நம்ம ஆட்டம் " - தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல்  ;

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால்  நடத்தப்படவுள்ள  முதலமைச்சர்  இளைஞர் விளையாட்டு  திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026  போட்டிகளுக்கான இணையதள முன் பதிவு தொடக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ;

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்,  மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில், 22.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ”இது நம்ம ஆட்டம் – 2026” போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில்  16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய  அளவில் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரர்/ வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள   தகுதிபெறுவர். ஊராட்சி ஒன்றிய அளவில் (தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல்–(ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் - (ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து-(பெண்களுக்கு மட்டும்) மொத்தமாக 7 வகையான போட்டிகள், மாவட்டஅளவில் (தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல். ஓவியப்போட்டி, கோலப்போட்டி–(ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) எறிபந்து (பெண்களுக்கு மட்டும்), மாற்றுத் திறனாளிகளுக்கு Physically Challenged (100M), Visually Challenged (Shotput), Intellectually Challenged (100M), Hearing Impaired (100M) என 13 வகையான போட்டிகளும்,  மாவட்டஅளவில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள்), மற்றும் கபடி (பெண்கள்) ஆகிய 2  விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெறுவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும்  வழங்கப்படும். மாநில அளவில் குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75,000/-, இரண்டாம் பரிசாக ரூ.50,000/-, மூன்றாம் பரிசாக ரூ.25,000/- வழங்கப்படும். மாவட்ட அளவில் தனிநபர் மற்றும்குழுப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி  பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.6000/-, இரண்டாம் பரிசாக ரூ.4000/-, மூன்றாம் பரிசாக  தலா ரூ. 2000/- பரிசுத்தொயையும்,  ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழுபோட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/-, மூன்றாம் பரிசாக தலா ரூ. 1000/- ,பரிசாக வழங்கப்பட  உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் 16 வயது (31.12.2009)   முதல் 35 வயது (01.01.1991) வரை அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் போட்டிகளில் பங்கேற்க 06.01.2026               முதல் 21.01.2026 மாலை 5.00 மணிக்குள் https://cmyouthfestival.sdat.in ,  https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  கூடுதல் விபரங்களுக்கு  “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment