by Vignesh Perumal on | 2026-01-06 03:57 PM
"காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது" என்ற பாடலுக்கு ஏற்ப, துபாயில் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற 'பிக் டிக்கெட்' லாட்டரி குலுக்கலில் அவருக்கு ரூ.24 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் (57) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தனது கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வழக்கத்தை வைத்திருந்தார்.
பஷீர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து துபாய் 'பிக் டிக்கெட்' லாட்டரியை வாங்கி வந்துள்ளார். பலமுறை ஏமாற்றம் கிடைத்தாலும், 'என்றாவது ஒருநாள் நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்' என்ற நம்பிக்கையில் தொடர்ந்து டிக்கெட் வாங்கி வந்துள்ளார். அவரது அந்தத் தொடர் முயற்சிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' வாராந்திர குலுக்கலில், பஷீர் வாங்கிய டிக்கெட்டிற்கு திர்ஹாம் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம்) ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. இந்தத் தகவலை அறிந்த பஷீர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தனக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய பரிசுத் தொகை குறித்து பஷீர் நெகிழ்ச்சியுடன் கூறுகையில்: "கடந்த இரண்டு ஆண்டுகளாக விடாமல் லாட்டரி வாங்கி வந்தேன். இப்போது கடவுள் எனக்குக் கண் திறந்துள்ளார். இந்த மொத்தப் பணத்தையும் இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருக்கே வழங்கப் போகிறேன். எனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்கும், கடன் சுமைகளைக் குறைக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும்," எனத் தெரிவித்துள்ளார்.
துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தப்படும் இந்த 'பிக் டிக்கெட்' லாட்டரிகளில் இந்தியர்கள், குறிப்பாகப் கேரளாவைப் சேர்ந்தவர்கள் அடிக்கடி கோடிக்கணக்கில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பஷீரின் இந்த வெற்றி, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் மற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!