by satheesh on | 2026-01-03 09:08 PM
திண்டுக்கல் ; வாகன நுழைவு கட்டணம் உயர்வு : தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறையால் ஏராளமானோா் படையெடுக்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறதுஇந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் (ஜனவரி 1) முதல் கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.250-லிருந்து ரூ.300 ஆகவும், சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே போல வேன்களுக்கான கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும், கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60-லிருந்து ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!