| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

விசைத்தறி பணியாளர்களுக்கு 50% மூலதன மானியம் கலெக்டர் தகவல்...!!!!

by admin on | 2025-12-24 09:09 PM

Share:


விசைத்தறி பணியாளர்களுக்கு 50% மூலதன மானியம் கலெக்டர் தகவல்...!!!!

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழைமையான சாதாரண விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடாயில்லா ரேபியர் தறிகளாக (Rapier Shuttleless looms) தரம் உயர்த்த விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் மூலதன மானியங்கள் வழங்கப்பட உள்ளது.

   மேற்படி திட்டத்தில், முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு, வழக்கமான விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடா இல்லா ரேபியர் தறிகளாகத் (Shuttleless Rapier Looms) தரம் உயர்த்துவதற்காக  (With Tuck in device) 

50% மூலதன மானியம் அல்லது ரூ.1.00/- இலட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை (ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 10 தறிகள்) மானியமாக வழங்கப்படுகிறது.

  புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் அல்லது ரூ.1.50/- இலட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 5 தறிகள்) மானியமாக வழங்கப்படுகிறது. பொது வசதி மையம் அமைப்பதற்கு (Warping and Sizing unit, Testing Lab, Design Studio and Sample Production centre) 25% மூலதன மானியம் அல்லது ரூ.60.00/- இலட்சம் (இதில் எது குறைவோ அத்தொகை) மானியமாக வழங்கப்படுகிறது. மேற்படி, திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 29, கக்கன் தெரு,  செனாய் நகர், மதுரை – 625 020 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 


தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்,  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment