by admin on | 2025-12-18 02:32 PM
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் *ZERO ACCIDENT KUMARI என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு நடந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக
No Helmet... No Entry ,Avoid Rash Driving ,Avoid Drunken Driving ,Avoid Wheeling/ Racing ,Avoid Cell phone Driving ,Without Seat Belt ,Avoid Signal Violation ,Avoid Triples Riding ,Avoid Juvenile Riding
உள்ளிட்ட சாலை பாதுகாப்பு கருப்பொருள்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், Reels போட்டியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை நடத்துகிறது.
இளைஞர்கள் இலக்கு
ரீல்ஸ் இல் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டது.
முதல் பரிசு: 15,000 ரூபாய் இரண்டாம் பரிசு : 10,000 ரூபாய் மூன்றாம் பரிசு :7,500 ரூபாய் பதிவு மற்றும் தொடர்புக்கு இந்த ரீல்ஸ் போட்டி சம்பந்தமாக பதிவு செய்தல்(Registration) மற்றும் சந்தேகங்களுக்கு 7708239100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கடைசி நாள் 05.01.26 ஆம் தேதிக்குள் ரீல்ஸ் socialmediakki@gmail.com என்ற மெயிலில் அனுப்பவேண்டும்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!