by Vignesh Perumal on | 2025-12-10 04:37 PM
இந்திய தேசத்தின் அசுர வளர்ச்சிக்கும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்ததற்கும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே காரணம் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், மோடியின் சாதனைகளைத் தொகுத்து 'ஒரே நாடு-ஒரே புத்தகம்' (One Nation-One Book) என்ற மெகா புத்தகத்தை வெளியிட்ட முன்னாள் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் நடப்பு 2025 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில், மத்திய அரசின் 54 அரசுத் துறைகளில் அவர் கொண்டு வந்த அதிரடி சீர்திருத்தங்கள் மற்றும் அற்புதமான சாதனைகள் அனைத்தையும் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர், டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த்.
இந்தப் புத்தகம் இந்தியா மட்டுமின்றி, அண்மையில் 73 உலக நாடுகளில் வெளியிடப்பட்டது.
டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தயாரித்து வெளியிட்ட இந்தப் புத்தகத்தைப் படித்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இந்தியாவின் முன்னேற்றம் குறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: "இந்திய நாடு அதிசயமான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும், உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் பிரதமர் மோடி மட்டுமே காரணம்."
அத்துடன், மோடியின் சாதனைகளை இவ்வளவு வித்தியாசமான புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள டாக்டர் ஆர்.ஜி. ஆனந்தின் முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமரின் தலைமை ஆலோசகர், இந்தப் பாராட்டுதலுக்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்திற்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலக அளவில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை இந்தப் பாராட்டு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
செய்தி - பழனியப்பன் புதுக்கோட்டை
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!