by admin on | 2025-11-22 07:00 PM
கும்பகோணத்தில் ஆளுங்கட்சி MLAவுக்கு 'செக்' வைத்த தமிழக வெற்றிக் கழகம்! மக்கள் நலனில் நடிகர் விஜய்யின் நேரடிப் பார்வை!
நடிகர் விஜய் தலைமையில் அரசியல் களம்காணத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்கள் மன்றத்தில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நீடிக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அவலங்களைக் கண்டித்து இன்று (நவ. 22) கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது வெறுமனே நிர்வாகத்தைக் கண்டிக்கும் போராட்டம் மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதிக்கு நேரடியாகச் சவால் விடும் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
ஆளுங்கட்சிக்கு எதிராகப் பாய்ந்த அஸ்திரம்தஞ்சை கிழக்கு மாவட்டத் தவெகவினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆளுங்கட்சியின் அலட்சியத்தைக் கேள்விக் கேட்பதேயாகும்.
குழந்தைகள் இறப்பு:
மருத்துவமனையில் தொடர்ச்சியாகக் குழந்தைகள் உயிரிழப்பது, மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாததன் அடையாளமாக உள்ளது எனச் சாடினர். மருத்துவமனையில்வசதிக் குறைபாடு அடிப்படை வசதிகள், சுகாதாரச் சீர்கேடு மற்றும் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படாததற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் சாக்கோட்டை அன்பழகன் MLA மீது நேரடி சவால்முன்னெப்போதும் இல்லாத வகையில், மக்கள் மன்றத்தில் தனது சில போராட்டங்களிலேயே ஆளுங்கட்சிப் பிரதிநிதியைத் தவெக குறிவைத்துள்ளது. கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகனை கடுமையாக விமர்சித்ததோடு, மருத்துவமனையின் சீர்கேடுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாநகராட்சியின் திறனற்ற செயல்பாடுகளுக்கு அவர் துணைபோகிறார் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்துமாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட கழகத்தினர் திரண்டனர்.மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகத் திரண்ட இந்த (இளைஞர் சக்தி) தமிழக அரசியல் பரப்பில் தங்கள் வருகையை உறுதி செய்து, ஆளுங்கட்சிக்கு நேரடி சவாலை விடுத்துள்ளது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தஞ்சை மாவட்ட நிருபர் அ, மகேஷ்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்.9842337244
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!